பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/325

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

6. நன்றியில் செல்வம்

(இ-ள்) பிறரால் நச்சப்படாதவனது செல்வம், ஊர்நடுவு ள் பழுத்து நிற்பதொரு நச்சு மரம் பழுத்ததன்மைத்து, (எ-று).

இது, தமதாசையால் தின் பாருண்டாயின், அ வரைக் கொல்லுமென்றவாறாயிற்று. I ()

7. நானுடைமை

நானுடைமையாவது அறம்பொருள் இன்பங்களிற் பிறர் பழி யாம லொழுகுதல். இது பண்புடைமையின் பின் கூறற்பாலது டண் பின் மையும் சேரச் சொல்ல வேண்டுதலின் பண்பு இன்மையாக ய

நன்றியில் செல்வத்தைக் கூறி அதன்பிற் கூறப்பட்டது.

101 ஊனுடை யெச்ச முயிர்க்கெல்லாம் வேறல்ல

நானுடைமை மாந்தர் சிறப்பு.

(இ-ள்) உணவும் உடையும் ஒழிந்தனவும் புன்மக்க ளெல் லார்க்கும் வேண்டும்; தலைமை மக்களுக்கு விசேடமாக வேண்டும்: அது நா னுடைமை, (எ-று) .

இது, நானம் வேண்டுமென்றது.

1012. ஊணைக் குறித்த துயிரெல்லா நாணெ ன்னு

நன்மை குறித்தது சால்பு.

(இ-ள்) மேற்கூறிய எல்லாவற்றினும் உண்டியைக் கரு திற்று பலவகை உயிரும் அதுபோல நாணாகிய நன்மையைக் கரு திற்றுச் சால்பு, (எ- று) .

இது. சான்றோர்க்கு நற்குணங்கள் பலவும் வேண்டுமா யினும், இஃது இன்றியமையாதென்றது. 2