பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/326

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

309

7

நானுடைமை

10 , 3. நானா லுயிசைத் துறப் ருயிர்ப்பொருட்டா

னாண்டுறவார் நாணாள் பவர்.

(இ-ள்) நாண் பொருட்டாக உயிரைத்துறப்பர், உயிர்ப் பொருட்டாக நாணைத்துறவார், நாணம் வேண்டுவார், (எ-று)

இது, நாண் உயிரினும் சிறந்ததென்றது. 3

10 4. நாண் வேலி கொள்ளாது மன்னோ வியன் ஞாலம்

பேணலர் மேலாயவர்.

(இ-ள்) நாண் ஆகிய வேலியை அமைத்துக்கொள் வார்கள் அல்லது பெரிய உலகத்தினைப் பெறுதற்கு விரும்பார்கள் மேன் மக்கள் என்றவாறு.

இது, நாணம் அழியவரும் பொருள் கொள்ளார் என்றது. இது, பொருளினும் நாணம் சிறந்தது என்றது. 4

10.15. அணியன்றோ நானுடைமை சான்றோர்க்க. தின்றேற்

பிணியன்றோ பீடு நடை.

(இ-ள்) சான்றோர்க்கு நானுடைமை அழகன்றோ? அஃதில்லையாயின், பெரிய நடை நோயன்றோ? (எ று).

இது, சான்றோர்க்கழகாவது நாணுடைமை யென்றது. 5

1016. பிறர் நாணத் தக்கது தானானா னாயி னறநாணத் தக்க துடைத்து.

(இ-ள்) உயர்ந்தார் பலரும் நாணத்தகுவ தொன்றனைத் தான் நாணாது செய்வனாயின், அவனை அறம் நாணியடையா

தொழியும் தகுதியுடைத்தாம், (எ-று).

இது, நாணமில்லாதாரை அறம் சாரா தென்றது. 6

1017. குலஞ்சுடுங் கொள்கை பிழைப்பி ன லஞ்சுடு

நாணின்மை நின்றக் கடை.