பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

314

8. குடி செயல் வகை

(இ-ள்) இடும்பையாகிய நவியம் அடித்துரை வெட்டு தலானே விழும்; பக்கத்திலே மடுத்து ஊன்றுகின்ற முட்டுக்கோல் போலத் தாங்க வல்ல நல்ல ஆண் மகன் இல்லாத குடியாகிய மரம், (எ-று),

இது. குடியோம்புவாரில்லாக்கால் அக்குடி கெடுமென்று கூறப்பட்டது. I ()

SSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSSS

9- -2

உழவானது உழவின் திறனும் அதனால் பயனும் கூறுதல். இது குடி செய்வார்க்கு இன்றியமையாமையின் அதன் பின் கூறப்

பட்டது.

உழவு தொழில் வரைவு வாணிகம் சிற்பம் வித்தை என்று சொல்லப்பட்ட அறுவகைத் தொழிலும் குடி செய்வ. ர்க்கு வேண்டும் அன்றே, அவையெல்லா வற்றின் இயல்பும் கூறாதார் , உழவு ஒன்றும் கூறியது எற்றுக்கு எனின்? அவற்றுள் கல்வி பொருள்தரும் என்பது முன்பே கூறப்பட்டது. தொழிலாவது ஒருவன் ஏவல் செய்தல். அரசரேவலால் அமைச்சர் செய்யும் தொழில் அமைச் சியலுள் கூறப்பட்டது. ஏனையோர் செய்யும் தொழிலும் வரைவு வாணிகமும் சிற்பமும் மேலை அதிகாரத்தில் ஆள்வினையும் ஆன்ற அறிவும் என இரண்டின் நீள்வினையால் நீளும் குடி’ என்றத னாலே சொன்னாராம். என்னை? அவை யெல்லாம் முயற்சியா னும் அறிவானும் வருதலின். ஆயின் உழவும் அதனுள் அடங் காதோ எனின் அடங்கும். அஃது ஈண்டுத் தொழிலை நோக்கிக் கூறப்பட்டது அன்று. முயன்று பொருளிட்டினால் எல்லாரும் குடி ஒம்புங்கால் தானியத்தால் ஒம்ப வேண்டுதலின் அதனை உண்டாக்க வேண்டும் என்று கூறப்பட்டது.