பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/333

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3] 6

9. உழவு

1035. இரவா ரிரப் பார்க்கொன் lவர் கரவாது

கைசெய்துண் மாலை யவர்.

( இ-ள்) பிறரை இரவார்; தம்மை இரப்பார்க்குக் கரத்த லின்றி யாதொன்றாயினும் ஈவர்; கையாலே உழவுத் தொழிலைச் செய்து உண்ணும் இயல்பினையுடையார்க்கு, (எ-று).

உழவினால் பயன் கூறுவார் முற்பட இல்லறம் செய்வது இவர் கண்ணது என்று கூறினார். 5

1936. உழவினார் கைம்மடங்கி னில்லை விழைவது உம்

விட்டேமென் பார்க்கு நிலை.

(இ-ள்) உழவை யுடையவர் அத்தொழிலைச் செய்யாது கைம்மடங்குவராயின், யாதொரு பொருளின்கண் ணு, ம் வி ரு ம் பு பதனையும் விட்டோமென்பார்க்கு அந்நிலையின் கண் நி ற் ற ல் இல்லை, (எ- று) .

எனவே, துறவறத்தின் கண் நிற்பாரை நிறுத்துதல் உழுவார் கண்ண தென்று. விழைவது- ஆசை. 6

1037. உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாந்

தொழுதுண்டு பின்செல் பவர். (இ-ள்) உலகின்கண் வாழ்வார் உழுதுண்டு வாழ்வாரே, மற்று வாழ்வாரெல்லாம் பிறரைத் தொழுது உண்டு அவரேவல் செய்கின்றவர், (எ-று).

இது, செல்வமாவது உழவினால் வருஞ் செல்வமென்றது. 7

1038. பல குடை நீழலுந் தங்குடைக்கீழ்க் காண்ப

ர லகுடை நீழ லவர்.

(இ- ள்) பல அரசர் குடை நிழலையும் தம்மாசன் குடை நிழற் கீழே வரக்காண்பர், குடை அல்லாத நிழலை யுடையவர், (எ-று).

குடைஅல்லா நிழலாவது பைங்கூழ் நிழல். இது, தாம் வாழ்தலே யன்றித் தம்மரசனையும் வாழ்விப்பரென்றது. 8