பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/334

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

317

9. உழவு

1939. உழுவா குலகத்திற் காணிய. தாற்றார்

தொழுவாரே யெல்லாம் பொறுத்து. ( இ-ள்) உலகமாகிய தேருக்கு அச்சானிபோல்வார் உழவரே; அதனைச் செய்யாதவர் பிறர் பெருமிதத்தினால் செய்வனவெல்லாம் பொறுத்துத் தொழுது நிற்பர், (எ-று).

இஃது, உழுவார் தம்மையும் அரசனையும் பெரிய ராக்குத லன்றி உலகத்தையும் தாங்குவரென்று கூறிற்று. 9

1040. இலமென் றசைஇ யிருப்பாரைக் காணி

னிலமென்னு நல்லா ணகும்.

(இ-ள்) பொருளிலே மென்று தளர்ந்து இருப்பாரைக் கண் டால், நிலமாகிய நல்லாள் இகழ்ந்து நகும், (எ-று).

இது, நிலம் மடியில்லாதார்க்கு வேண்டியது கொடுக்கு மென்றது. 10

10. நல்குரவு

நல்குரவாவது பொருளில்லா தார்க்கு உளதாகுங் குற்றங் கூறு தல். இஃது உழவில்லாதார்க்கு உளதாவ தொன்றாதலின். அதன் பின் கூறப்பட்டது

1041. இன்மையி னின்னாத தியாதெனி னின்மையி

னின் மையே யின்னா தது.

(இ-ள்) நல்குரவுபோல இன்னாதது யாதெனின், நல்குரவு போல இன்னாதது தானே, (தானே-நல்குரவே). (எ-று).

இது, தன்னை யொத்த இன்னாதது பிறிதில்லையென்றது 1

fr

1. யிருப்பாரை என்பது மனக். பாடம்.