பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/342

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.25

12. இரவச்சம்

10.67. கரப்பவர்க் கியாங்கொளிக்குங் கொல்லோ விரப்பார்க்குச்

சொல்லாடப் போஒ முயிர்.

(இ-ள்) எமக்கு யாதும் இல்லை; சிறிது ஈயவேண்டு மென்று சொல்லுவார்க்கு அக் குறித்தவர்கள் இல்லையென்று சொன்ன அள விலே உயிர் போய்ப் பிணம்போல நிற்பர்கள்; (பொருள்) உடையராய் வைத்து அவா சொன்ன இல்லையென்னுஞ் சொல்லையே சொல்வி

ஈயாதார்க்கு உயிர்க்கு உயிர் எவ்விடத்து ஒளித்து நிற்கின்றதோ, ( , ))

இது, பிணத்தை யொப்பரென்றது.

1068. இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து

கெடுக விலகியற்றி யான்.

(இ-ள்) துப்புரவு இல்லாக்கால் இறந்து படாதே பிறர் மாட்டு இாந்து கொண்டும் உயிர் வாழ்தல் வேண்டுமாயின், உலக நடையை இவ்வாற்றால் கற்பித்த முதல்வன் மிகக்கெடுவானாக வேண்டும். (எ- று) .

இஃது. இரக்கு மதனின், இறக்க அமையுமென்றது. இவை

முன்றினானும் இரவினால் வரும் குற்றம் கூறப்பட்டது, 8

1069 தெண்ணி ரடுபுற்கை யாயினுந் தாடந்த

துண்ணலி னுரங்கினிய தில்.

(இ-ள்) மோரினும் காடியினும் அடப்பெறாது தெளிந்த நீரி னாலே அடப்பட்ட புற்கையாயினும், தனது தாளாண்மையால் வந்த தனை உண்டலின் மிக இனிதாயிருப்பது பிறிது இல்லை, (எ-று).

இரந்து கொண்டக்காரம் பாலோ டயிறலின் புற்கை அயிறல் இனிது என்றது. 9

1070. இடமெல்லாங் கொள்ளாத் தகைத்தே யிடனில்லாக்

காலு மிரவொல்லாச் சால்பு.