பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/343

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

326

12. இரவச்சம்

(இ-ள்) தன்சுற்றத்தளவு உணவுக்கு வருவாய் இல்லாத காலத்தினும், பிறரை இரத்தற்கு இசையாத சால்பு என்பது அகன்ற வுலக மெல்லாம் கொள்ளாத பெருமை யுடைத்து, (எ-று) .

இஃது, இரவாதார் பெரிய ரென்றது. இவை இரண்டினா லும் இரவாமையால் வரும் நன்மை கூறப்பட்டது. 10

ா_க _

1 3. &su /6UDLo

கயமையாவது இழிகுணத்தாராகிய மாந்தரியல்பு கூறுதல். இவர் மேற்கூறப்பட்டார் எல்லாரினும், இழிந்தாராதலின் இறுதியிற் கூறப்பட்டது.

1071. மக்களே போல்வர் கயவ ர வரன்ன

வொப் பாரி யாங்கண்ட தில்.

(இ-ள்) கயவர் மக்களை யொப்பவர்; அம்மக்களை யொக்கு மாறு போல ஒப்பது ஒன்றனோடு மற்றொன்று உவமை கூறப்படு மவற்றில் யாங்கண்டறிவது இல்லை, (எ-று).

உறுப்பொத்துக் குணமொவ்வாமையால், கயவர் மக்களல்ல ராயினார்; உறுப்பொத்தலால் உவமிக்கப்பட்டார். இது குண மிலர் என்றது. 1

10 72. தேவ ஏனையர் கயவ ர வருந்தா

மேவன செய்தொழுக லான் .

(இ-ள்) கயவர் தேவரை யொப்பவர், அத்தேவரும் இக்கய வரைப் போலத் தாம் வேண்டியன. செய்தொழுகுவ ராதலான், (எ-று).

இது கயவள் வேண்டிற்றுச் செய்வாரென்றது. 2