பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/346

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

329

3. காமத்துப்பால் (25)

காமத்துப்பாலாவது மைந்தர்க் கும் மகளிர்க்கும் கலவயினானாகிய இன் பப் பகுதி கூறுதல். அஃது யாங்ஙனம் கூறினாரெனின், ஒருவனுக்கு இன்பம் நுகர்தற்குரிய இடம் கன்னியரும் கன்னிகையரும் பிறர் தாரமும் என மூவகையல்ல தில்லை; அவற்றுள் பிறர் மனைக் கூட்டம் பாவம்தரும் என்று அறத்துப்பாலுட் கூறிக்கணிகையர் கூட்ட ம் பொருட் கேடுதரும் என்று பொருட்பாலில் கூறினார். ஆகலின் அறனும் பொருளும் இன்பமும் வழுவாமல் வருவது கன்னியர் கூட்டம் என்று அதனை ஈண்டுக் கூறப்பட்ட தென்க. அதுதான் எட்டு வகைப்படும்; பிரமம், பிராஜாபத்தியம், ஆரிடம், தய்வம். காந்தர் வம், அசுரம் இராக்கதம் பைசாசம் என அவற்றுள் அசுரம் முதலான மூன்றும் ஒருதலைக்காமம் ஆதலானும், பிரமம் முதலான நான்கும் ஒப்பில் கூட்டம் ஆதலானும், அவை யிற்றுக்கு இன்பச் சிறப்பு இன்மையின் காந்துருவ நெறியே ஈண்டுக் கூறப்பட்டதென்று கொள்ளப்படும் என்னை? முன்னைய மூன்றும்’ கைக்கிளைக் குறிப்பே; பின்னைய நான்கும் பெருந்திணைபெறுமே. என்றும் காமக் கூட்டம் காணுங்காலை மறையோர் தேஎத்து மன்ற லெட்டினுட் டுறையமை நல்யாழ்த்துணைமை யோரியல்பே. என்று இலக்கணம் கூறுதலின் அஃதாவது கொடுப் போரும் அடுப் போரும் இன்றி ஒத்தார் இருவர் தாமே கூடுங் கூட்டம் என்னை? * அதுவே, தானே யவளே தமியர் காணக், காமப் புணர்ச்சி இருவ யின் ஒத்தல்’ S என்பவாதலின் இச்சூத்திரம் நாடக வழக்கிற்குக் கூறியதாகலின், ஈண்டு உரைக்கின்ற காமமும் நாடக வழக்கே, எனின்? இச்சூத்திரம் கூறுகின்று.ழி உரையாசிரியர் உலகத்தோடு ஒத்தும் ஒவ்வாவரும் எனறு பொதுப் படக் கூறினாராதலின், இஃது உலக வழக்கை நோக்கி எடுத்துக் காட்டப் பட்ட தென்க. இக்காமப் புணர்ச்சியை வடநூலாசிரியர் அராகத்தாற் கூடும் கூட்டம் என்ப.

  • தொல்-களவியல்- 14.

+ FF FF o

S இறையனார்-களவியல்-2