பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.31

1. களவியல் (7)

( அருமையிற் கூடல் 3)

1 தகையணங்கு றுத்தல்

தகையணங் குறுத்தலாவது தலைமகனும் தலைமகளும் எதிர்ப் பட்ட இடத்துத் தலைமகளது கவின் தலைமகனை வருத்துதலும், தலைமகனது கவின் தலைமகளை வருத்துதலுமாம். இது முதலாகக் காமம் நிகழு மாதலின் இது முற்பாடு கூறப்பட்டது.

1081. அணங்குகொ லாய்மயில் கொல்லோ கண ங்குழை’

மாதர்கொல் மாலுமென் நெஞ்சு

(இ-ண்) இக்கணங்குழையையுடையவள் தெய்வங் கொல் லோ? நல்ல தொருமயில் கொல்லோ? அன்றிமக்க ளுள் ளாள் என என்மனம் மயங்கா நின்றது; இவற்றுள்யாதோ என்றவாறு.

எனக்குத் தெரிகின்ற தில்லை என்றவாருயிற்று. கணங்குழைஆகுபெயர். ஆய்தல் என்பது தெளிதல்; பலவற்றினும் தெரியப் படுதலின் நல்ல தென்று பொருளாயிற்று, மக்களும் தேவரும் ஒரு நீர்மையராதலின் தெய்வமோ மகளோ என்றையுறுக; மயிலோ என்ற தென்னையெனின்? இம்மணம் காந்தருவ மன்றே; தலைமகளைத் தலைமகன் எதிர்ப்படுங்கால் யாவரும் இல்லாததோர் பொழிலகத்தே எதிர்ப்படுதல் வேண்டும்; ஆயிடை எதிர்ப்பட்ட தலைமகன் இப் பெற்றியாள் இவ்விடைத் தனிவருதல் கூடாதா கலின் ஈண்டுஉறைவ தோர் தெய்வமோ என்ற ஐயுற்றான். அதன்பின் பொழிலகத்து வாழ்வன மயில்கள் பலவுள; அவற்றுள் இஃதொரு மயில் விசேட மோ என்றையுற்றான் என்று கொள்ளப்படும். இதனுட் காட்சி சொல்லி ஐயஞ் சொல்லுதலன்றே இலக்கணம்; அது கூறாததென்னை எனின் கண்ட காலத்துப் புணர்ச்சி வேட்கை தோற்றுகையும் தோற் றாமையும் நிகழுமாதலான் அதனை ஒழித்து அதற்குக் காரண மாகிய :::யம் முதலாகச் சொன்னான் என்க. இது தலைமகன் தலை

மகளை எதிர்ப்பட்டுழி ஐயுற்றது. 1

1. கணங்குழை ‘ என்பது மணக். பாடம்.