பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

332

1. தகையணங்குறுத்தல்

10.8.2. நோக்கினா ணோக்கெதிர் நோக்குத றாக்கணங்கு

தரனைக்கொண் டன்ன துடைத்து.

(இ-ள்) இவ்வழக்கினையுடையவள் எனது நோக்கின் எதிர் நோக்குதல், தானே வருத்தவல்ல தெய்வம் சேனையைக் கெ ைடு வந்தது போலும், (எ-று).

தெய்வத்திற்கு உவமை வடிவு: தானைக்கு உவமை நோக்கம். இது, மெய்கண்டு வருந்துவான் கண் கண்டதனால் வ ரு த் த மிக்கமை கூறியது. 2

1083. பண்டறியேன் கூற்றென் பதனை யினியறிந்தேன்

பெண்டகையாற் பேரமர்க் கட்டு.

(இ-ள்) பண் டு கூற்றினது வடிவு இன்ன பெற்றித்தென்று அறியேன்; இப்பொழுது அறிந்தேன்; பெண்டகைமை யோடே கூடப் பெருத்து அமர்த்த கண்களை யுடைத்து (எ-று) .

கூற்றென்றறிந்தேன் என்றது மேல் ஐயப்பட்ட மூன்றினும் எம்மை வருத்துதற்குத் தககாளென்னுங் குறிப்பு. பெண்தகைமை யாகிய நடையும் கண் இமைத்தலும் கண்டு மக்களுள்ளாள் என்று தேறியது. 3

1084. கண்டா ருயிருண் ணுந் தோற்றத்தாற் பெண்டகைப்

பேதைக் கமர்த்தன கண்.

(இ-ள்) தன்னைக்கண்டவர்கள் உயிரையுண்ணும் தோற்றத் தாலே, பெண்தகைமையையுடைய பேதைக்கு ஒத்தன கண் (எ-று) .

அமர்தல்-மேவல். அது பொருத்தத்தின் வ ந் த து. இது ஒபதையோடு ஒத்த தொழிலுடைத்தென்று கண்ணின் கொடுமையை யுட்கொண்டு கூறியது. 4

1085. கொடும்புருவங் கோடா மறைப்பி னடுங்களுர்

செய்யல மன்னிவன் கண் .