பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

334

1. தகையணங்குறுத்தல்

மேல் தலைமகன் கூறிய சொற்கேட்டு நானுற்ற தலைமகள், ைஎாது நிற்றல் ஆற்றாது தன் அணிகலனைத் தொட்டுழி, அதனை நோக்கி இத்தன்மையாட்கு இதனையும் அணிதல் வேண்டு மோ என்று கொடுமை கூறுவ ன் போல நலம் பாராட்டியது. 8

1089. கடாஅக் களிற்றின் மேற் கட்படா மாதர்

படாஅ முலைமேற் றுகில்.

இ=ள்) மதயானை முகத்துக் கண் மறைவாக இட்ட படாம் போலும் மாதரே! நினது படாத முலைமேல் இட்டது கில், (எ-று).

நீங்கிற் கொல்லும் என்பது கருத்து. முலை கண்டு அவ் வேட்கையால் தலைமகன் கூறியது. இத் துணையும் தலைமகன் கூற்று. 9

1090. உண்டார்க ணல்ல தடுதறாக் காமம்போற்

கண்டார் மகிழ் செய்த லின்று.

(இ-ள்) உண்டார் மாட்டல்லது அடப்பட்டநறவு காமம் போலக் கண் டார் மாட்டு மகிழ்ச்சி செய்தலின்று, (எ-று).

இது, தலைமகனைத் தலைமகள் கண்டுழி வருத்த முற்றுக் கருதியது. 1 G

2. குறிப்பறிதல்

குறிப்பறிதலாவது தலைமகளுள்ளக் கருத்துத் தலைமகனறிதல். இது தலைமகற்கேயுரித்து. பெண டிர் நாணமுடைரயன்றே; அவரது உள்ளக் கருத்து வெளிப்படுமாறு என்னையெனின் , மேலைய தி கா த்துத் தலைமகனைக் கண்ட தலைமகள். காமம் போல் கண்டார் மகிழ்செய்தனின்று” என்று நினைத்தா ளாகக் கூறினாரன்றே; அத னானே கண்ணும் முகனும் வேறுபடும்; அதனானே அறியலாகும். மனக் குறிப்பு அறிதல் கூறியது எற்றுக்கு? பிறவாற்றானும்