பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

336

2. குறிப்பறிதல்.

மெல்ல நகுதல் - முகிழமுகிழ்த்தல். எதிர்நோக்க மல் உடன் படுதலா மென்றது J.

1094. கண்களவு கொள்ளுஞ் சிறுநோக்கங் காமத்திற்

செம்பாக மன்று பெரிது

_

(இ-ஸ்) என் கண்களைச் சோர்வு பார்த்துக் களவினால் நோக்குகின்ற சிறிய நோக்கம், வேண் டப்பட்ட பொருளிற்பாதியே யன்று; பெரிது, (எ-று).

சோர்வு பார்த்தலாவது, தலைமகன் தனது காதலினாலே எப்பொழுதும் நோக்குவனன்றே; தலைமகளுக்கும் அவ்வாறு நோக்க வேண்டுதலின் அவன் பாராக்காலத்தைக் குறித்து நிற்றல் க ள வி ன ா ன் நோக்குதலாவது அக்காலத்து ேந க் கு த ல்; தலைமகன் காணாமல் நோக்குதலின் களவாயிற்று. கொள்ளுதல் நோக்குதற் பொருள் மேல்வருதலின் நோக்காயிற்று. சிறு நோக் காவது பார்த்ததும் மீளுதல் நெடிது நோக்காமையின் சிறிதாயிற்று . வேண்டப்பட்ட பொருள் ஆவது புணர்ச்சி. செம்பாக மன்று பெரிது என்பது அதற்குப் பாதி இசைவுக்குமேலே பெற்றோம் என்பது. இது மறைய/நோக்குதல் உடம்பாடென்றது. 4

10.95. ஏ. திலார் போலப் பொதுநோக்கு நோக்குதல்

காதலார் கண்ணே யுள.

(இ_ள்) அயலார்போலப் பொதுப்பட நோக்குதல், காதலித்

தார் மாட்டே யுளவாம், (எ-று).

நோக்குதற் பன்மையால் உளவென்றார். இது, குறித்து நோக்கா மையும் உடன் டுதலென்றது. = 5

10.95. குறிக்கொண்டு நோக்காமை யல்லா லெ ாருகண்

சிறக்கணித் தாள் போல நகும்.

(இ=ள்) குறித்து (க்கொண்டு) நோக்காமை யல்லாது ஒரு கால் உடம்பட்டாள் போல நகாநின்றாள், (<r-p1).

உடம்பட்டாள் போல் நகுதல் அஃதாவது, காமக் குறிப்புடை

யார் போல நகுதல். அது வெளிப்பட நில்லாமையின் போல'