பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/354

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

337

2. குறிப்பறிதல்

என்றார். அஃதாவது நகை தோற்றிய வழிப் பிறிதொன்று கண் டாள் போல நகுதல். இது தன் குறிப்புத் தோன்றாமல் மறைத்து நகுதல் உடம் டுதலாமென்றது. 6

1097 அசையியற் குண்டாண்டோ ரே எர்யா னோக்கப்

பசையினள் பைய தகும்.

(இ-ள் அசைந்த இயல்பினையுடையாட்கு அவ்விடத்தோர் அழகுண்டு; யான்நோக்க, நெழ்ந்து மெல்ல நகாநின்றாள், (எ-று .

அவ்விடமென்றது தானே நெகிழ்ந்து நக்க இடம்; அழ குண்டென்றது, தன்வடிவினும் மிக்கது குணம் எனக்குறிப்பறிந் தான் ஆகலான் என்றவாறு.

பையநகுதல்-ஒசைப்படாமல் நகுதல். இது காமக் குறிப்புத் தோற்ற நின்று நகுதல் உடம்படுதலா மென்றது. 7

1098. உறாஅ தவர்போற் சொலினுஞ் செறாஅர்சொ

லொல்லை யுணரப் படும்.

(இ-ள்) கூடாதவர் போல் சொல்லினும், செறுதலில்லாதார் சொல்லை இதற்கு காரணம் பிறிதொன்று உளதென்று விரைந் தறிய வேண்டும், (எ-று .

மனம் நெகிழ்ச்சி கண்டு சாரலுற்ற தலைமகனைத் தன கில் வலியுறுத்தற்பொருட்டுக் கடுஞ்சொற் கூறித் தலைமகள் நீங்கின வழி. இஃது உள்ளன்பு இன்மையால் கூறினாள் அல்லள்; அதற்கு காரணம் யாது? என்று தலைமகன் தன்னுள்ளே சொல்லியது. இஃது, உறுப்பினாலிசைவுகாட்டி , உரையினால் மறுப்பினும் உடன் படுதலாமென்றது &

1099. செறாஅச் சிறுசொல்லுஞ் செற்றார்போ னோக்கு

முறாஅர்போன் றுற்றார் குறிப்பு.

(இ-ள்) செறுதல் லிலாக் கடுஞ்சொல்லும், செற்றாரைப் போல நோக்குதலும், அன்புறாதார்போல அன்புற்றாரது குறிப் பென்று கொள்ளப்படும், (எ-று).