பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/359

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.42

3. புணர்ச்சி மகிழ்தல்

கூட்டமும் இயற்கைப் புணர்ச்சியோடு ஒத்த இயல்பிற்றன்மையா னும், அவைதாம் பெரும்பான்மையும் பி ரி ந் து கூடுதலானும், கூறப்படா என்க. இதனுள் ஆலிங்கனம் முதலாயின கூறாது பசுக்களைப்போலப் புணர்ச்சி மாத்திரமே கூறிவிட்டது என்னை யெ னின், கண்டுகேட்டுண்டுயிர்த் துற்ற நியு மைம்புலனும் ஒண் டொடி கண்ணே யு ள என்றாரகலின், அவையெல்லாம் இதனானே சொன்னாரென்று கொள்ளப்படும். இது காமப்பகுதியன்றே இதனை வடநூலாசிரியர் கூறியவாறு போல விரித்துக் கூறாததென்னை யெனின் அந்நூலகத்து விரித்துக் கூறியதெல்லாம் அளவும் காலமும் வேகமும் ஒவ்வாதாசை ஒப்பிக்கும் நெறியும் கைக்கினை பெருந்தினை பாற்பட்ட கன்னியரைக் கூடுந்திறனும் கணிகையர் சீலமும் கூறி னார். ஈண்டு உழுவலன்பினாற் கூடுகின்ற நற்கூட்டம் ஆதலின் இவையெல்லாம் விதியினாலே ஒக்க அமைந்து கிடக்குமாதலாற் கூறாராயினார் என்க. 10

4. நலம்புனைந்துரைத்தல்

நலம்புனைந்துரைத்தலாவது தலைமகளது நலத்தினை அலங் கார வகையாற் கூறுதல் புனைதலெனினும் அலங்கரித்தல் எனினும் பேணுதலெனினும் ஒக்கும். புனைந்துரை எனினும், பாராட்டெனினும் கொண்டாட்டெனினும், புகழ்ச்சியெனினும் ஒக்கும். புணர்ச்சியால் மகிழ்வுற்ற தலைமகன் பிரியக் கருதின காலத்துப் புணராத முன் னின்ற வேட்கை புணர்ந்தபின்னும் அப்பெற்றியே நிற்றலின், இத் தன்மை யாளை யாங்கனம் பிரிந்தாற்றுகேம் என்னும் கவற்சியால் நெஞ்சு மிக்கது வாய்சோர்ந்து தன்னை அவள் காணாமல் தான் அவளைக் காண்பதோர் அணிமைக்கண் நின்று பாராட்டுகின்றான் ஆதலின் பிற் கூறப்பட்டது. இவ்வாறு கூறுதலானே தலைமகற்குச் சிறிது வேட்கை தணியும். இதனைத் தலைமகன் கேட்டலினாலே இவன் அன்புடை