பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/360

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

343

4. நலம்புனைந்துரைத்தல்

யன் கொல்லோ என்றும் இப்புணர்ச்சியின்னும் கூடுமோ என்றும் சொல்கின்ற கவிற்சி நீங்கும் மதியும் மடந்தை முகனும் அறியா"இது தலைமகன்கண உள்ள தோர் .ெ ம ய் ப் பா டு. இது பிரிதற் குறிப்பு ஆகலின் பிரிந்து கூடலின் முன் கூறப்பட்டது. இது தலை மகட்கு உரித்தன்றோவெனின் உரித்தாயினும் குறிப்பினான் அல்லது கூற்றினான் நிகழாமையின் கூறாராயினார்.

1111. மதியு மடந்தை முகனு மறியா பதியிற் கலங்கிய மீன்.

(இ-ள்) மதியினையும் மடந்தை முகத்தினையும் கண்டு. இவ் விரண்டினையும் யாது மதியென்று அறியாது, தம்நிலையினின்றுங் கலங்கித்திரியா நின்றன மீன்கள், (எ-று).

மீன் இயக்கத்தை கலங்குதலாகக் கூறினார். அன்றியும் பதியிற் கலங்கிய மீன் அறியா என்று பாடமோதித்தம் நிலைமை யினின்றும் கலங்கிய மீனகள் மதியினையும் மடந்தை முகத்தினை யும் அறியாவாயின எனினுமமையும். மீன்கள் கலங்கித் திரிதலானே இவள்முகம் மதியோடு ஒக்குமென்று கூறியது. 1

11.12. அறுவாய் நிறைந்த வவிர்மதிக்குப் போல

மறுவுண்டோ மாதர் முகத்து.

(இ-ள்) குறைவிடம் நிறைந்த ஒளிர் மதிக்கு போல, இம் மாதர் முகத்து மறுவுண்டோ? (எ-று 1.

இது, மேல் கலக்கமுற்றுத் திரிகின்ற மீன் கலங்கு தற்குக் (காரணம் அறிவின்மையாம்;) இவள் முகத்து மறுவில்லையாதலான் அது மதி ஒவ்வாதென்று கூறியது. 2

1113 மாதர் முகம்போ லொளிவிட வல்லையேற்

காதலை வாழி மதி.

(இ-ள்) நீ இம்மாதர் முகம்போல ஒளிவிடவல்லையாயின் நீயும் எம்மாற் காதலிக்கப்படுதி, மதியே! (எ-று).