பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/362

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345

4 நலம்புனைந்துரைத்தல்

1118 அனிச்சப்பூக் கால்கனையாள் பெய்தா னுசுப்பிற்கு

நல்ல படாஅ பறை. -

(இ=ள்) அனிச்சப் பூவைக் காம்புகழற்றாது மயிரில் அணிந் தான் ஆகலின் அவள் நுக ப் பிற்கு நல்லவாக ஒலிக்கமாட்டாபறை (*! (1)).

எனவே இனி நெய்தல் பறையே ஒலிப்பது என்றவாறாயிற்று. இஃது இடையினது நுண்மை கூறிற்று. 8

19. முறிமேனி முத்த முறுவல் வெறி நாற்றம் வேலுண்கண் வேய்த்தோ ள வட்கு.

(இ-ள்) தளிர்போலும் மேனி, முத்தம்போலும் முறுவல்; நறுநாற்றம் போலும் நாற்றம்; வேல் போலும் உண் கண்; வேயை யொத்த தோளினை யுடையாட்கு, (எ-று).

இது, நிறமும் எயிறும் நாற்றமும் கண்ணின் வடிவும் தோளும் புகழ்ந்து கூறிற்று. -- 9

1120 அனிச்சமு மன்னத்தின் றரவியு மாத

ரடிக்கு நெருஞ்சிப் பழம்.

(இ-ள்) அனிச்சப் பூவும், அன்னத்தின் தூவியும், மாதரடிக்கு நெருஞ்சிப் பழத்தோடு ஒக்கும், (எ-று).

இஃது, அவையிற்றினும் மெல்லியது அடியென்று கூறிற்று. இதனுள் இரவு பகலும் காணப்பட்ட பொருள்களை உவமமாகக்

கூறியவதனால் இயற்கைப்புணர்ச்சியும் நலம் பாராட்டுதலும் பகற் குறியினும் இரவுக் குறியினும் என்று கொள்ளப்படும். 10