பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/363

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

346

5. காதற் சிறப்புரைத்தல்

காதற்சிறப்புரைத்தலாவது தலைமகன் காதல் மிகுதி கூறு

தலும் தலைமகள் காதல் மிகுதி கூறுதலுமாம். இது நலப்புனைந் துரைத்தலின் பின் நிகழ்வ தொன்றாகலின், அதன்பின் கூறப்பட்டது.

1121. உடம்பொ டுயிரிடை யென்னமற் றன் ன

மடந்தையொ டெம்மிடை நடபு.

(இ-ள்) உடம்பினோடு உயிரிடையுள்ள நட்பு எத்தன்மைத்து அத்தன்மைத்து, மடப்பத்தை யுடையாளோடு எம்மிடையுள்ள நட்பு, (எ-று) .

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகன் பிரியலுற்ற குறிப்புக்கண்டு வேறுபட்ட தலைமகளை நோக்கி நின்னிற் பிரியேன் பிரியினாற்றேன்’ என்று தலைமகன் தனது காதல் மிகுதி கூறியது. I

1 22. கருமனியுட் பாவாய்நீ போதாயரம் விழுந்

திருநரதற் கில்லை யிடம்.

(இ-ள்) என் கண்ணுட் கருமணியகத்து நிற்கும் பாவாய் ! நீ அங்கு நின்று போதுவாயாக, எம்மால் விரும்பப்பட்ட அழகிய துதலினையுடையாட்கு இருத்தற் கிடம் போதாது. (எ-று).

இஃது, இரண்டாம் கூட்டத்து எதிர்ப்பட்ட தலைமகன், தலைமகளது நாணம் நீங்குதற் பொருட்டு அவளது கவின் தன் கண் நிறைந்ததென்று தலைமகள் கேட்பச் சொல்லியது. 2

1123. வாழ்க லுயிர்க்கன்ன ளாயிழை சாத

ல தற்கன் ன iைங்கு மிடத்து

(இ-ள்) இவ்வாயிழை உயிர்க்கு வாழ்தலோடு ஒப்பள் கூடு மிடத்து; சாதலோடு ஒப்பள். நீங்குமிடத்து, (எ-று).