பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.49

5. காதற் சிறப்புரைத்தல்

1 . 30. கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணு

மெழுதேங் கரப் பாக் கறித்து.

(இ-ள்) எங்காதலவர் கண்ணுளர்; ஆதலானே, கண்ணும் (மை)யெழுதேன்; அவர் ஒளிப்பதனையறிந்து, (எ-று).

உம்மை சிறப்பும்மை, கோலம் செய்யாதது என்னை?” என்ற தோழிக்கு, அவர் ஒளிப்பதனை அறிந்து கண்னும் எழுதேன்; என்னை உறுப்புக்கோலம் செய்யுமாறு? என்று கூறியது. எப்பொழு தும் நோக்கியிருத்தலால், கோலஞ்செய்தற்குக் காலம் பெற்றி லே னென்றவா றாயிற்று. இஃது இன்பத்தை வெறுத்தல் என்னும் மெய்ப்பாடு, இவையைந்தும் காதல்மிகுதியாற் கூறிய வாறு கண்டு கொள்க. 10

விங் சாகசங்கங்துங்கடிது

6. நானுத் துறவுரைத்தல்

நானுத்துறவுரைத்தலாவது தலைமகனது நாண நீங்கினமை தோழிக்குக் கூறுதலும் தலைமகளது நானம் நீங்கினமை தோழி தலைமகற்குக் கூறுதலுமாம். காதல் மிக்கார்க்கு நாணமில்லையா ம்

என்பதனான் பின் கூறப்பட்டது.

1131. காம முழத்து வருந்தினார்க் கேம மடலல்ல தில்லை வலி

(இ-ள்) காமம் காரணமாக முயன்று வருந்தினார்க்கு ஏமமா வது மடல் எடுக்குமதல்லது மற்ற வலி யில்லை, (எ-று).

இது, இறந்து பின்நின்ற தலைமகனைத் தோழி சேட்படுத்த விடத்து மடலேறு வேனென்று தலைமகன் கூறியது. 1

1132. நோனா வுடம்பு முயிரு மடலேறு

நாணினை நீக்கி நிறுத்து.