பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

351

6. நானுத் துறவுரைத்தல்

கருதாதாரே அறிவிலாதார், யான் அறிவுடையேன்” என்று தலை

மகள் கூறியது. 5

1136. மடலூர்தல் யாமத்து முள்ளுவேன் மன்ற

படலொல்லா பேதைக்கென் கண்.

(இ-ள்) பேதை பொருட்டு எ ன் க ண் க ள் உறங்குதலை இசையா; ஆதலானே, மடலூர்தலை ஒருதலையாக யாமத்தினும்

நின்ைப்பேன், (எ-று.)

இது. மடலேறுவது நாளையன்றே; இராவுறக்கத்திலே மறந்துவிடுகின்றீர்” என்ற தோழிக்கு, என்கண் உறங்கா; ஆதலான் மறவேன்’ என்று தலைமகன் கூறியது. 6

1137. யாங்கண்ணிற் காண நகுப வறிவில்லார்

யாம்பட்ட தாம்படா வாறு.

(இ-ள்) யாம் கண்ணால் கானும் வகை எதிரே நின்று அறி வில்லாதார் நகாநின்றார், யான்பட்ட துன்பம் படாமையான், (எ-று).

‘யாமத்து மறவேன்’ என்ற தலைமகனை நோக்கி நகை செய்த தோழிக்கு, எமக்கு உண்டாகிய நோய் தமக்கும் உண் டாயினா ரல்லரே” என்று தலைமகன் வெகுண்டு சொல்லியது. 7

1138. தொடலைக் குறுந்தொடி தந்தாண் மடலொடு

மாலை யுழக்குத் துயர்.

(இ-ள்) மாலை போலச் செய்யப்பட்ட சிறுவளையினையுடை யாள் தான்காண மடலோடேகூட மாலைக்காலத்து வருந்துந்துய

ரினைத் தந்தாள் (எ-று).

தொடலையென்பதற்குச் சேர்ந்தவளை யெனினும் அமையும், குறுந்தொடி-பிள்ளைப்பணி. இதனானே இளையஸ் எ ன் ப சொன்னானாம். தலைமகன் ஆற்றாமை க ண் டு; நின்னால் காதலிக்கப்பட்டாள் இவ்வாயத்துள்யாவள்?’ என்ற தோழிக்கு,