பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/374

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

357

வரவு பார்த்தல்-களவு காலத்து வரவு பார்த்தல். த லைமகன் பிரியலுற்ற குறிப்புக்கண்டு வேறுபட்ட தலைமகளை, இவ்வேறு பாடு எற்றினான் ஆயிற்று” என்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 1

1152. துறைவன் று றந்தமை தோற் றாதே முன் ை,

யிறை பிறவா நின்ற வளை .

(இ-ள்) துறைவன் பிரிகின்றமையை எமக்கு அறிவியாவோ? என் முன்கையின் இறையைக் கடவாநி ன்ற வளை. (எ- று) .

முன்பே அறிதலான், உடம்பு மெலிந்தது என்றவாறாயிற்று பிரியார் என அறிவுறுக்கும் தோழிக்கு, நீ சொல்ல வேண்டா யானறிந்தேன்’ என்று தலை மகள் கூறியது 2

1 53. இன்னா தினனில்லுரர் வாழ் த லதனினு

மின்னா தினியார்ப் பிரிவு.

(இ-ள்) தமக்கு இனமில்லாதவூரின் கண் இருந்து வாழ்தல் இன்னாது; அதனினும் இன்னாது இனியாரைப் பிரிதல், (எ-று).

பிரிவுணர்த்திய தலைமகற்கு, இவ்விரண்டு துன்பமும் எங்கட் குளவாம்’ என்று பிரிவுடன்படாது தோழி கூறியது 3

1154. அளித்தஞ்ச லென்றவர் நீப்பிற் றெளித்தசொற்

றேறியார்க் குண்டோ தவறு.

(இ-ள்) நம்மைத் தலையளி செய்து நின்னிற் பிரியேன். நீ அஞ்சேல்” என்றவர் தாமே நீங்கிப் போ வாசாயின். அவர் தெளி வித்த சொல்லைத் தெளிந்தவர்களுக்கு வருவதொரு கு ற் ற ம் உண்டோ? (எ-று).

தன்மையைப் படர்க்கை போலக் கூறினார். தோழிக்குப் பிரிவு டன்படாது தலைமகள் கூறியது.

பிரிவுணர்த்திய வெகுட்சிக் குறிப்பான்

1. தோன்றாதோ என்பது மணக். பாடம்,