பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/377

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

360

2. படர்மெலிந்திரங்கல்

1161. துப்பி லெவன்செய்வார் கொல்லோ துயர்வரவு

நட்பினு ளாற்று பவர்.

(இ-ள்) வன்மை செய்யவேண்டுமிடத்து யாங்ஙனஞ் செய் கின்றாரோ? மென்மை செய்யவேண்டும் நட்டோர் மாட்டே துன்பம் வருதலைச் செய்கின்றவர். (எ-று).

இது, பகைதணி வினையின்கண் பிரிந்த தலைமகனது கொடுமையை உட்கொண்டு தலைமகள் தோழிக்குச் சொல்லியது. 1

1162. மறைப்பேன்மன் யானிதோர்’ நோயை யிறைப்பவர்க்

கூற்றுநீர் போல மிகும்.

(இ-ள்) இந் நோயை யான் மறையாநின்றேன்; மறைக்க வும் , இஃது இறைப்பார்க்கு ஊற்றுநீர்போல மிகா நின்றது,

(எ-று).

தலைமகள் ஆற்றாமை கண்டு, இதனை இவ்வாறு புலப் பட விடுத்தல் தகாது’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 2

1163. கரத்தலு மாற்றேணிந் நோயைநோய் செய்தார்க்

குரைத்தலு நாணுத் தரும்.

(இ-ள்) இந்நோயை மறைக்கவும் அறிகின்றிலேன்; இந் நோயை செய்தார்க்குச் சொல்லிவிடவும் நாண மாகாநின்றது, (எ-று)

இவ்வாற்றாமையைத் தலைமகற்குச் சொல்லிவிடுவோம்’ என்று தலைமகள் குறிப்பறிதற் பொருட்டுக் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது.

1164. காமக் கடன்மன்னு முண்டே யது நீந்து

மேமப் புணை மன்னு மில்.

(இ-ள்) காமக்கடல் நிலையாக உண்டே, அது நடக்கும் ஏமமாகிய புணை நிலையாக இல்லையே, (எ-று).

1. யாளி..தோ’ என்பது மணக். பாடம்.