பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

370

5. தனிப்படர்மிகுதி

இது, தடையின்றி நுகாலா மென்றவாறாயிற்று. புணர்வு வேட்ட நெஞ்சிற்கு, யாம் நல்வினை செய்கிலேம்; செய்தே

மாயின் அவரும் காதலிப்பர்; அவர் மாட்டுக்காதலின்றாக வருந்த வேண்டா” என்று தலைமகள் கூறியது. 2

1193 உறாஅர்க் குறுநோ யுரைப்பாய் கடலை ச், !

செறாஅ அய் வாழியென் நெஞ்சு.

(இ-ள்) என் நெஞ்சமே என் மாட்டு அன்பு உறாதவர்க்கு நீயுற்ற நோயைச் சொல்ல நினையா நின்றாய்; அதனினும் நன்று நம்மை உறங்காமல் வருத்துகின்ற கடலைத் துார்ப்பாயாயின், (எ-று) .

இவை இரண்டும் முடியா என்றவாறாயிற்று. தூதுவிடக் கருதிய நெஞ்சிற்குத் துாதுவிட்டாலும் பயனில்லை யென்று தலை மகள் கூறியது. 3

1 19 நாங்காதல் கொண்டால்” நமக்கெவன் செய்யவோ?

தாங்காதல் கொள்வாக் கடை.

(இ-ள்) நாம் காதலித்தால் அக்காதல் நமக்கு யாதைச் செய்யும்; அவர் தாம் காதலியாத விடத்து, (எ-று).

புணர்வு வேட்ட நெஞ்சிற்கு, நின்காதலினால் பயனில்லை” என்று தலைமகன் கொடுமையையுட் கொண்டு அவன் பங்காயினாள் கேட்பத் தலைமகள் கூறியது, 4

11.95. ஒருதலையா னின்னாது காமங்காப் போல

விருதலை யானு மினிது.

(இ-ள்) ஒருதலை அன்பினாலுண்டாகிய காமம் இன்னாது; காவினது பாரம்போல, இரண்டு தலையும் ஒத்த அன்பினா னுண் டாகிய காமமே இனித வது. (எ-று) .

1. வாழிய’ என்பது மணக். பாடம்.

2. கொண்டார் . 3. செய் பவோ என்பன மணக். பாடம்