பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/388

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.71

F:

5. தனிப்படர்மிகுதி

இது, மேற்கூறிய சொற்கேட்ட பாங்காயினார், ‘அன்பு செய் வாரைத் தலைவன் அருள் செய்வன்’ என்று நகைக் குறிப்பினாற் கூறிய சொற்கேட்டுக் கூடினாலும் பயனில்லை யென்று தலை மகள் கூறியது. 5

119.6. வாழ்வார்க்கு வானம் பயந்தற்றால் வீழ்வார்க்கு

வீழ்வா ரளிக்கு மளி.

(இ-ள்) உயிர் வாழ்வார்க்கு ம ைழ பெய்தாற்போலும் காதலித்தார்க்குக் காதலிக்கப்பட்டார் அருளும் அருள்: அஃதில் லார்க்கு வாடுதலே யுள்ளது. (எ-று).

இது, நின்மேனி பொலிவழிந்தது’ என்ற தோழிக்குத் தலை மகள் கூறியது. 6

1 197. வீழநர் விழுப் படுவார்க் கமையுமே

வாழுத மென்னுஞ் செருக்கு.

(இ-ள்) தாம் காதலித்தாரால் காதலிக்கப்படுவார்க்கு அமை யும், உலகின் கண் இருந்து உயிர்வாழ்வோமென்னுங் களிப்பு (எ-று)

தலைமகள் இருந்தாலும் பயனில்லை; அதிற்சாதல் அமை யும்’ என்று வாழ்க்கையை முனிந்து தோழிக்குக் கூறியது. 7

119.8. விழுப் படுவார் கொழ்இயிலர் தாம்விழ்வார்

வீழப் பட அ 1ெ னின் .

(இ-ன்) நற்குணங்கள் பலவுடை யாரென்று உலகத்தாரால் விரும்பப்பட்டாரும் விரும்பமில்லாராவார்; தம் காதலரால் தாம் காதலிக்கப்படா ராயின், (எ, று).

இது, வாழ்க்கையை முனிந்து கூறிய தலைமகளை இவ்வாறு கூறுவையாயின், நின்னைப் புகழ்கின்ற உலகத்தாரும் இகழ்வர்’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. கொண்டான் காயிற் கண்டார் காய் வரென்பது உலகவழக்கம்.

1 199. வீழ்வாரி னின்சொற் பெறாஅ துலகத்து

வாழ்வாரின் வன்கணா ரில்.