பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

372

5. தனிப்படர்மிகுதி

(இ-ள்)தம் காதலரிடத்து நின்று வரும் இனிய சொற்களைக் கேளாது உயிர் வாழ்வாரைப் போல, வன்கண்மையுடையார் இவ்

வுலகத்து இல்லை, (எ-று .

தூது விடுதற் குறிப்பினால் தோழிக்குச் சொல்லியது. 9.

1200. நசைஇயார் நல்கா ரெனினு மவர்மாட்

டி சையு மினிய செவிக்கு.

(இ-ள்) எம்மால் காதலிக்கப்பட்டார் எமக்கு அருளாராயி னும், அவர் பக்கத்தனவாகிய சொற்கள் எங்களால் இகழப்படாது செ.பிக்கு இனியவாம், (எ-று) .

எங்கள் பக்கத்தனவாகிய சொற்கள் அவக்ர்கு இன்னாதாகம் என்பது குறிப்பு. தலைமகன் பாங்காயினார் அவனைப்புகழ்ந்துழித் தனது வேட்கை மிகுதியால் தலைமகள் கூறியது. அன்றியும் தலை மகனுழை நின்றும் வந்த துரதர் வாய்ச் சொல் கேட்ட தலைமகனது முகமலர்ச்சி கண்டு இஃது எற்றினான் ஆயிற்று’ என்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 10

6. நினைந்தவர்.புலம்பல்

நினைந்தவர் புலம்பலாவது சேய்மைக்கணாயினும் அனு’ மைக்கணாயினும் பிரிந்த தலைமகனை ஒழிவின்றி நினைத்த மகளிர் துன்பமுறுதல் நினைத்தவர் புலம்பலென்று பாடமாயின், அதற்கு அவரை நினைத்துப் புலம்பலென்று பொருளுரைப்பினும் ஒக்கும். தனிப்பட்டார் காதலரை எல்லாக காலமும் ஒழிவின்றி நினைப்பரா தலின் அதன்பின் கூறப்பட்டது.

120 . உள்ளினுந் திராப் பெருமகிழ் செய்தலாற்

கள்ளினுங் காம மினிது.