பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"”

3. புதல்வரைப் .ெ 1றுதல்

61. பெறுமவற்றுள் யாமறிவ தில்லை யறிவறிந்த

மக்கட்பே றல்ல பிற.

(இ-ள்) ஒருவன் பெறும் பொருள்களுள் அறிவுடைய மக்களைப் பெறுதல் போலப் பயன்படுவது ஒ ழி ந் த பொருள்க ளெல்லாவற்றினும் யாம் கண்டறிவதில்லை, (எ-று) .

பிறபொருளாயின் ஒருபிறப்பளவு முடிய நில்லாது. இது இருமைக்கும் துணையாதலால் பு த ல் வ ைர ப் பெறவேண்டும் என்றது. 1.

62. எழுபிறப்புத் தீயவை தீண்டா பழியிறங்காப்

பண்புடை மக்கட் பெறின்.

(இ-ள் ) எழுபிறப்பினுந் துன்பங்கள் சாரா, ஒரு பிறப்பிற் பழியின்கண் மிகாத குணத்தினையுடைய புதல்வரைப பெறுவராயின், (எ-று).

அறம்பொருள் இன்பம் என்னும் மூன்றும் பயக்கும் என்பார் முற்பட அறப்பயன் எய்தும் என்று கூறி ர்ை. அ ன் றி யு ம் தன்னளவும் பிறந்த முன்புள்ள எழுவர்க்கும் எனினும் அமையும். 2

63. கும்பொரு ளென் பதம் மக்க எ வர் பொரு

டந்தம் வினையான் வரும்.

(இ- ள்) தம்முடைய பொருளென்று சொல்லுவர் உலகத்தார் தம்மக்களை; அம் மக்களுடைய .ெ ப ா ரு ள் க ள் தந்தாமுடைய வினையோடே கூடவருமாதலான், (எ-று).

மக்களுக்குண்டான பொருளும் தமக்குண்டான பொருளோ டொத் , இயல்பிற்றாய் இம்மை மறுமைக்கண் இன்பம் பயத்தலிற் பொருளாகுவாரும் மக்கள் என்று கூறிற்று. 3.

64. அமிழ்தினு மாற்ற வினிதேத மக்கள்

சிறு கை யாாவிய கூழ்.

(இ-ள் இனிமையுடைத்தாகிய அமிழ்தத்தினும் மிகவினது, தம்முடைய மக்களது சிறிய கைகளால் அளையப்பட்டகூழ், (எ-று)