பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/393

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376

7. கனவு நிலை யுரைத்தல்

க ன வு நிலையுரைத்தலாவது கனவினது நிலைமையைச் சொல்லுதல்; காதலன் நினைவினாலே வருத்தமுற்ற துன்பம் கூறினாள்; அந்நினைவினால் இக்கனவுநிலை யுரைத்தல் கூறுகின்ற மையின் இது பிற் கூறப்ப்ட்டது. ஒழிவின்றி நினைப்பார்க்கு உறக்க மில்லையாகும்; அவர் உறங்கினாராயின், அவரது சேதியை மற வாது நினைப்பாராதலான் , அதன் பின் கூறப்பட்டது. (தலைமகன் நினைத்தல்) தலைமகள் நினைத்தல் என்னும் இரண்டனுள் ளும் இவட்குக் கனவு நிலையாகிய உறக்கமில்லையென்று கொள்க.

12.11. கபாலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்

குயலுண்மை சாற்றுவேன் மன்.

(இ-ள்) என்னுடைய கயல்போலும் உண் கண் யான் வேண்டிக் கொள்ள உறங்குமாயின், நம்மோடு கலந்தார்க்கு நாம் உய்தலுண் மையைச் சொல்லுவேம்; உறங்குகின்றதில்லையே, (எ-று).

மன்-ஒழியிசையின்கண் வ ந் த து. கயலுண்கண்-பிறழ்ச்சி யுடைய கண்; ஈண்டு எப்பொழுதும் காதலர் வரவு பார்த் திருக் கின்ற தடுமாற்றத்தை உடைத்தாகிய கண் என்றவாறு. ‘உறங்க வேணும் ‘ என்ற தோழிக்குக் கண்கள் நீயும் வேண்டிக்கொள்ள உறங்குமாயின் இத்துணைநாள் சாவா திருந்தோம் என்று நம் காதலர்க்கு உரைக்கலாயிற்று’ என்று தலைமகள் கூறியது l

1212. நனவினானல்கா தவரைக் கனவினாற்

காண்டலி னுண்டென் னுயிர்.

(இ-ள்) நனவின்கண் நமக்கு அருளதாவரைக் கன வின் கண் காண்டலானே உண்டாகா நின்றது என்னுயிர்; இல்லையாயின், உயிருண்டாதற்குக் காரண முண்டோ? (எ-று).

இஃது, ‘உறங்கினால் காணலாகுமோ’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 2