பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

37.8

7. கனவுநிலை யுரைத்தல்

விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. பீழை என்றது அவன் கூந்தலும் அல்குலும் பற்றி நலிந்ததனை. M.I.

1217. நனவினா னல் காரை நோவர் கனவினாற்

காதலர்க் காணா தவர்.

(இ-ள்) நனவின்கண் வந்து நல்காத காதலரை நோவா நிற்பர், அவரைக் கனவின் கண் காணாதவர்; காண்பாராயின், நேச வார்,

(எ-று).

இது, தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்

பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது.

1218. நனவினா னந்நீத்தா ரென்பர் கனவினாற்

காணார்கொ லிவ்வூ ர வர்.

( இ-ள்) இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கி யகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறா நிற்பர்; அவரைக் கனவின்கண் காண ர்களோ ! (எ-று).

“இவ்வேறுபாடு அலராயிற்று’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 8

1219. நனவென வொன்றில் லை யாயிற் கனவினாற்

காதலர் நீங்கலர் மன். (இ-ள்) நனவு என்று ஒன்று இல்லையாயின், கனவின்கண் வந்த காதலர் பிரிதல் இல்லை, (எ-று).

“யாங்கள் எல்லாம் காணாது ஒழியவும் நீ கண்டாய் ஆயின் அவரைப் பிரியவிட்டது என்னை’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 9

1220. காதலர் துரதொடு வந்த கனவினுக்

கியாதுசெய் வேன்கொல் விருத்து.

(இ-ள்) நங்காதலர் விட்ட தூதரோடே வந்த கனவினுக்கு யான் யாது செய்வேம் விருந்து, (எ-று).