பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/396

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

379

7. கனவுநிலை யு ரைத்தல்

இது தலைமகளாற்றுதற் பொருட்டுக் காதலர் வாராநின்றா பொன்று து.ாதர் வரக் கனாக் கண் டேவொன்று தோழி சொல்லியது 10

_ாாகாங்ககாக க_

8 பொழுது கண்டிரங்கல்

பொழுது கண்டிரங்கலாவது பாலைபபொழுது கண்டு தலைமகள் வருந்துதல். ஏனைப்பொழுது வருத்தலமிலளோவெனின், பிரியப்பட் டார்க்கு எல்லாக் காலமும் வருத்தமுளவாயினும், விடியலும் நண் பகலும் போலாது மாலைப்பொழுது வருத்த மிகுதலான் இது கூறப் பட்டது என்னை வகுத்தம் மிகுமாறு எனின்? புளளும்மாவும் விடியலும் நண்பகலும் தத்தம் சேக்கையினின்று நீங்கி அத்திக் காலம் வந்து சேரும் அவையிற்றைக்கண்டு நம் காதலர் நம்மை உள்ளுகின்றிலர்” என்றும். மைந்தரும் மகளிரும் விடியலும் நண்பகலும் அறத்தினும் பொருளினும் முயன்று அந்திக்காலத்தில் தம்மிற்கூடிஇன்பம் நுகர்வது கண்டு ‘யாம் இவ்வாறு நுகரப் பெறுகிலோம் என்று நினைத்தலான் வருத்தம் மிகும் என்க. நடு நாள் யாமத்தும் துன்பமுறும் அன்றே; அதுவும் கூறவேண்டாவோ எனின் அககாலத்து வரும் துன்பமும் இதனின் மிகுதியின்மையின் வேறு கூறாராயினார். இது நினைந் தவர் புலம்பலின் பிற்கூறற்பாலது, கனவு நிலையும் சேரச் சொல்ல வேண்டுதலின், இரண்டு சொல்லும் அலராகக்கொண்டு முன் கூற வேண்டும் என்பதனால் நினைவொடு கூடிய கனவை முற் கூறி, அதன் பின் கூறினார் என்று கொள்ளப்படும்.

1221. மாலை நீ யல்லை மணந்தா ருயிருண்ணும்

வேலை நீ வாழி பொழுது.

1 . மா லையே வல்லை’ என்பது மணக். பாடம்.