பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/400

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. உறுப்பு நலனழிதல்

உறுப்புநலனழிதலாலது தலைமகளது உறுப்புக்கள் நலனழிந் தடை கூறியது. காதன்மிக்கு இரங்குவார் அக்காதலை அயலாாறி யா மில் அடக்கின காலத்து வெம்மையுற்ற கொடிபோல, அவர துறுப்பு வாடுதலான், இது பொழுதுகண்டிரங்கலின் பி ன் கூறப் பட்டது.

1231. சிறுமை நமக்கொழியச் சேட்சென்றா ருள்ளி

நற மலர் நாணின கண்.

( இ-ள்) நமக்குத் துன்பம் ஒழிய வேண்டி, நெடுநெறிக்கண் சென்றாரை நினைத்து நறுவிய பூக்களைக் கண்டு நாணா நின்றன கண்கள் (எ-று) .

பலகால் அ ழு த லி ன் நிறங்கெட்டதென்றவா றாயிற்று. வரைந்து கோடற்குப் பொருள்தேடி வருகின்றேன்’ என்று பிரிந்த தலைமகனை நினைந்து ஆற்றாளாய்த் தலைமகள் தனது கண் பொலிவழிந்தது என்று கூறியது. 1

1282. தயந்தவர் நல்காமை சொல்லுவ பே லும்

பசந்து பனிவா குங் கண்.

( இ-ஸ்) முன்பு நம்மை விரும் பினவர் நமக்கு அருளாமை யைப் பிறர்க்குச் சொல்லுவன போல: நின்றன; பசப்புற்று நீச்சொரி கின்ற கண்கள், (எ-று).

இது, தலைமகள் ஆற்றாமை கண்டு இக்கண் ணினிர் அலராகா நின்ற தென்று தலைமகள் ஆற்றுதற்பொருட்டுத் தோழி கூறியது. 2

1233. தணந்தமை சால வறிவிப் போலு

மணந்த நாள் வீங்கிய கோள்.

(இ-ள்) அவர் நீங்கினமையை மிகவும் பிறர்க்கு அறிவிப்பன போலா நின்றன, அவர் கூடின நாட்களிற் பூரித்ததோள்கள், (எ-று).