பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/406

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.89

10. நெஞ்சொடுகிளத்தல்

இது, வாளா தேபோயிாைய்; இங்கே காணலா மென்றது. 9.

1250. நினைத்தொன்று சொல் லாயோ நெஞ்சே யெனைத்தொன்று

ைெள்வதோய் தீர்க்கு மருத்து.

(இ-ஸ்) எனக்கு உற்ற இன்னாத நோயைத் தீர்க்கும் மருந்து யாதொன்றாயினும் இன்றே விசாரித்துச் சொல்லாய் நெஞ்சே, (எ- று) .

இஃது, ஆற்றுதலரிதென்று கூறியது. இவையெல்லாம் தனித் தனி சில கூற்றென்று கொள்ளப்படும். 1 {}

1 . . நிறையழிதல்

நிறையழிதலாவது வேட்கை மிகுதியால் தன் நிலைமையழிந்து தலைமகள் கூறுதல். நெஞ்சின் மிக்கது புலப்படுமாதலான், அதன் பின் கூறப்பட்டது.

1251. காம மெனவொன்று கண்ணின் றென் னெஞ்சத்தை

யாமத்து மாளுத் தொழில்.

( இ-ள்) காமமென்றொன்று கண்ணோட்ட முடைத்தன்று; என்னெஞ்சத்தை நடுநாள் யாமத்தினும் தொழில் கொள்ளா நின்றது (எ-று).

தொழில் கொள்ளலாவது அப்பொதினால் அவர் மாட்டுப் போக விடுத்தல். இது. நெஞ்சின் மிக்கது வாய்சோர்ந்து ஆற்றா மையால் தலைமகள் தோழிக்குக் கூறியது.

1252. மறைப்பேன்மற் காமத்தை யானோ குறிப்பின்றித்

தும்மல் போற் றோன்றி விடும்.