பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/407

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

390

1 1. நிறையழிதல்

(இ-ஸ்) காமத்தை யான் அடக்கக் கருதுவேன்; அவ்வாறு செய்யவும், அது தும்மல் தோன்றுமாறு போல, என் குறிப்பின்றியும் தோன்றாநின்றது, (எ-று).

இது, தலைமகள் நிறையழிந்து கூறிய சொற்கேட்டு, ‘இவ்வாறு செய்யாது இதனை மறைத்தல் வேண்டும்’ என்ற தோழிக்கு அவள் கூறியது. 2

1258. நிறையுடையே னென்பேன்மன் மானோ வென் காம

மறையிறந்து மன்று படும்.

(இ=ள்) நிறையுடையே னென்றிருப்பேன் யானே இப்படி யிருக்கவும். என் காமமானது மறைத்தலைக்கடந்து மன்றின்கண்ணே வெளிப்படா நின்றது, (எ-று).

இது, தலைமகள் ஆற்றாமையாற் கூறிய சொற்கேட்டு நிறை யுடையார் இவ்வாறு செய்யார் என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது.

1254. காமக் கணிச்சி யுடைக்கு நிறையென்னு

நானுத்தாழ் விழ்த்த கதவு.

(இ-ள்) காமமாகிய மழு உடையாநின்றது; நாணமாகிய தாழினாலே அடைக்கப்பட்ட அறிவாகிய கதவினை, (எ-று) .

இஃது அறிவும் நாணமும் உடையார் இவ்வாறு செய்யார்’ என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 4.

1255. செற்குர்பின் செல்லாப் பெருந்தகைமை காமநேச

யுற்றா ரறிவதொன் றன்று.

(இ-ள்) தம்மை யிகழ்ந்தார்பின் செல்லாத பெரியதகைமை, காம நோயுற்றாரால் அறிவதொன்று அன்று, (எ-று).

இது, தம்மையிகழ்ந்து போனவர் பின்சென்று இரங்குதல் பெரியார்க்குத் தகாது என்ற் தோழிக்குத் தலைமகள் கூறியது. 5