பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/413

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. குறிப்பறிவுறுத்தல்

குறிப்பறிவுறுத்தலாவது குறிப்பினை யறிவுறுத்துதல். மேல் தலைமகள் குறிப்புத் தலைமகன் அறிந்தான் என்றதல்லது. இயற்கைப் புணர்ச்சி புணர்ந்து நீங்கின தலைமகன் குறிப்புத் தோழி யறிதலும், இாந்து பின் நின்ற தலைமகன் தோழி குறிப்டறிதலும், குறைநயப்பித்தவழித் தலைமகள் குறிப்புத் தோழி அறிதலும், நொது மலர் வரையவந்துழி வேறுபட்ட தலைமகன் குறிப்புச் செவிலி யறிதலும், பிரிதலுற்ற தலைமகன் குறிப்புத் தலைமகள் அறிதலும், பிரிவு உணர்த்தச் சென்ற தோழி குறிப்புத் தலைமகன் அறிதலும், அவ்வழித் தலைமகள் குறிப்புத் தோழி அறிதலும் இவையெல்லாம் இயற்கைப் புணர்ச்சிக்குப் பின்பு இத்துணையும் பிரிந்துழி நிகழ்பவை கூறினார் ஆதலானும், இனிப் புணர்ச்சி விதும்பல் கூறுகின்றார் ஆதலானும் ஈண்டுக் கூறப்பட்டது.

1271. கரப்பினுங் கையிகந் தொல் லாதின் னுண்க

ஹனுரைக்க லுறுவதொன் றுண்டு.

(இ-ள்) நீ மறைக்கவும் நின்னைக் கை கடந்து மறைத்தற்கு இசையாவாய் நின்கண்கள் சொல்லுவது ஓர் அருள் உண்டு, (எ-று)

இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைமகளை, ‘இவ்வேறுபாடு எற்றினான் ஆயிற்று’ என்று வினாவிய தோழிக்குச் சுனை ஆடினேன்’ என்று தலைமகள் மறைத்த விடத்து அவள் நாணம் நீங்குதற் பொருட்டுப் புணர்ச்சி உண்மை அறிந்தமை குறிப்பினால் தோழி சொல்லியது. இவ்வாறு ஒருபுறம் தோன்றச் சொல்லாக்கால் நாணத்தாலே இறந்துபடும். ]

1272. முகைமொக்கு ளுள்ளது நாற்றம்போற் பேதை

நகைமொக்கு ளுள்ள தொன் றுண்டு.

(இ-ள்) மொட்டின் முகிழ்ப்பின் கண் உளதாகிய நாற்றம்

( ! தி r= H போல் அப் பேதையுடைய நகை முகிழ்ப்பின் கண்ணே உள்ள தோ ரின்பம் உண்டு, (எ-று).