பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/430

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 13

இஃது, ஆற்றாமைவாயிலாகப் புக்க தலைமகன் புணர்ந்து நீங்கியபின் அகம் புக்க தோழிக்கு அவன் செய்த களவு இது’ என்று தலைமகள் கூறியது. I ()

18. ஊடலுவகை

ஊட லுவகையாவது ஊடலையுவந்து கூறியது. அஃதாவது புலவி நீங்கிப் புணர்ந்த தலைமகன் மற்றுள்ள தாள்கள் போலன்றிப் புணர்ச்சி பெரியதோ ரின்பமுடைத்தென்று அதற்குக் காரணமாய ஊடலை உவந்து கூறுதலும் அவ்வண்ணமே தலைமகள் கூறுதலு மாம் இது மேலதனோடிவையும்.

132 . ஊடுக மன்னோ வொளியிழை யாமிரப் ப

நீடுக மன்னோ விரா.

(இ-ஸ்) விளங்கிய இழையினையுடையாள் என்றும் ஊடுவா ளாக வேண்டும்; யாம் இவளை இரந்து ஊடல் தீர்க்கும் அளவும். இராப்பொழுது நெடிதாவதாக வேண்டும் (எ-று).

இது மன ஆக்கத்தின் கண் வந்தது. என்றும் உளதாக வேண் டும் என்றதனால் கூடலினும் ஊடல் நன்றென்றது. I

3 22 ஊடலிற் றோற்றவர் வென்றா ரது மன்னுங்

கூடலிற் காணப் படும்.

(இ-ள்) ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்; அவ் வெற்றியை நிலைபெறா நின்ற கூடலின் கண்ணே காணலாகும் (எ-று).

யான் சாய்ந்தே னாயின் இப்பொழுது என்னது வெற் ற். என்றவாறாயிற்று. தலைமகன் ஆராமைக் கண்டு கூறியது. 2