பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/432

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

415

18. ஊடலுவகை

13 27. தவறில ராயினுந் தாம்வீழ்வார் மென்றோ

ளகறலி னாங்கொன் றுடைத்து. -

(இ-ள்) தாம் தவறில்லா ராயினும், தாம் காதலிக்கப்பட்டாரது மென்றோள். நீங்குதலானே, அஃது ஓரின் பமுடைத்தாம், (எ-று).

இது, குற்றம் உண்டாயினும் இல்லையாயினும், ஊடலால் கூடல் நன்றென்று கூறியது. 7

1828. புல்லி விடாஅப் புலவியுட் டோன்றுமென்

தனுள்ள முடைக்கும் படை.

புல்லின இடத்துத் துனியாம்படி இவனைப் பொருந்திவிடாதே நிற்கின்ற புலவிக்கண்ணே வெளிப்படும் எனது உள்ளத்தைக் கெடுக் கும் படைக்கலம் போன்ற துன்பம் (எ-று).

நீடுங்கால் புலவி துன்பம் எனவே புலவி கடிது நீங்கவேண்டும் என்றது. விட்டுப் புலந்த இடத்துத் தோற்றும் எனது உள்ளத்தை அழிக்கும் கருவி என்றவாறு.

அஃதாவது தலைமகள் புலவியால் கூறும் ெச | ற் க ள். அது புணர்ந்த பின்பு தோன்றாமையால், அதனைக் கேட்டல் இன்பமுடைத் தென்று கூறியது. இவையெட்டும் த ைல ம க ன்

கூற்று. 8

1329 . இல்லை தவறவர்க் காயினு மூடுதல்

i

வல்ல தவரணிக்கு மாறு.

(இ-ள்) அவர்க்குத் தவறில்லையானாலும், அவர் செய்யும்

  • -TI

அருள் ஊடுதலைச் செய்யவற்று, (எ -று),

இவ்வருள் பிறர்க்கும் செய்வர் என்னும் கருத்தினானே ஊட வேண்டும் என்றவாறாயிற்று. தலைமகன் புணர்ந்து நீங்கியவழித் தலைமகள் இன்பச் செவ்வி கண்டு, இவ்வாறு ‘இன்பம் நுகராது தவறு இல்லார் மாட்டுத் துன்பம் தாகிய புலவியைச் செய்கின்றது எற்றுக்கு என்று வினாவிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 9