பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30

5. விருந்தோம்பல்

வரவு பார்த்தல்-விருந்தின்றி யுண்ணாமை. நல் விருந்து-அவர் மனம் மகிழ்விப்பதோர் விருந்து, அதனையுலகத்தார் நல்விருந் தென்பர். இது சுவர்க்கம் புகுமென்று மறுமைப்பயன் கூறிற்று. ே

87. இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருத்தின்

றணத்துணை வேள்விப் பயன்.

(இ-ள்) விருந்தினருக்கு அளித்ததல்ை வரும் பயன் இன்ன அளவினையுடைத்தென்று சொல்லலாவ்து ஒன்றில்லை; அவ்விருந்தின ரளவுயாதொரு தன்மைத்து அதனளவிற்றுப் பயனும் (எ-று).

இவ்வளவோ தானத்திற்குப் பயன் என்றார்குக் அற்றன்று; வந்த விருந்தினர் தன்மைக்கு அளவான பயன் தரும் என்றது. T

88. பரிந்தோம்பிப் பற்றற்றாே மென்பர் விருந்தோம்பி

வேள்வி தலைப்படா தார்.

(இ-ள்) விருந்தினரைப் போற்றி யுபசரிக்க மாட்டாதாச் , வருந்தி யுடம் பொன்றையும் ஓம்பிப் பொருளற்றாேமென்றிரப்பர், (எ-று).

இது விருந்தோம்பாதார்க்குக் குற்றமென்னை என்றார்க்குக் கூறப்பட்டது, 8

89. உடைமையு ளின்மை விருந்தோம்ப லோம்பா

மடமை மடவார்க ரைண்டு.

(இ-ள்) உடைமையின் கண்ணே யில்லாமைபோல, விருத் தினர்க்கு அளித்தலைப் போற்றாத பேதைமை, பேதையார்மாட்டே யுளதாம், (எ-று)

மேற்கூறிய தீமை பயக்குமாதலின் இதனைச் செய்யாதான் அறியாரென்றவாறு. 9

90. மோப்பக் குழையு மனிச்ச முகந்திரிந்து

நோக்கக் குழையும் விருந்து.