பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

6. இனியவை கூறல்

‘S. துன்பு டிர2உந் துவ்வாமை யில்லாகும் யார்மாட்டு

மின்புறுஉ மின்சொல் லவர்க்கு.

(இ-ன்) துன்பமுறுகின்ற நுகராமையாகிய நல்குரவு இல்லை யாகும்; யாவர்மாட்டுங் கூறு மின்பமுறுகின்ற இனிய சொல்லை யுடை

பார் க்கு (எ-று) Ei.

இஃது எல்லார் மாட்டும் இன்சொற் கூறவேண்டும் என்ப தா உம். இதனுனே பொருளுண்டாம் என்பது உம் கூறிற்று. 6

97. நயனின்று நன்றி பயக்கும் பயனின்று

பண்பிற் ற&லப்பிரியாச் சொல்.

(இ-ள்) பிறரான் விரும்பப்படுதலையும் பயந்து, பொருளையும் பயந்து, அறத்தினையும் பயக்கும்; குணத்தினின்று நீங்காத சொல், எ-று) .

நயனின்று பயனின்று நன்றிபயக்கும் எனக் கூட்டுக. இது குணத்தொடு கூறல் வேண்டும் என்பது உம் அதனுனே அறம் பொருள் இன்பம் மூன்றும் எய்தலாம் என்பது உங் கூறிற்று. T

98. இன்சொலா னிர மனை இப் படிறிலவாஞ்

செம்பொருள் கண்டார்வாய்ச் சொல்.

(இ-ள்) இருவர் மாறுபடச் சொன்ன மாற்றத்தினது உண்மைப் பொருளைக் கண்டார் கூறும் மெய்யாகிய சொற்களும் இன்சொலாதலானே அருளொடு கலந்து குற்றமிலவாம். (எ-று)

எனவே அவ்வாறு கூருராயிற் குற்றம்போலத் தோற்றும் என்பது கருத்து. என்ன? நடுவு செய்வான் ஒருவன் ஒருவனைத் தோல்வி சொல்லுங்காலத்து இன்சொல்லாலே கூருணுயின் அது குற்றமாய்த் தோற்றுமாதலான். இஃது ஒருவனைக் கடிந்து சொல்ல வேண்டு மிடத்தும் இன் சொலாலே கடிய வேண்டுமென்றது.

99. இன்சொ லிணிதீன்றல் காண்பா னெவன்கொலோ

வன்சொல் வழங்கு வது.