பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

6. இனியவை கூறல்.

(இ-ள்) பிறர்க்கு இனிதாகச் சொல்லுஞ் சொற்கள் இன்பத் தைத் தருதல் கண்டவன் கடிய சொற்களைக் கூறுதல் யாதனைக் கருதியோ (எ-று).

இஃதினிமை கூருதார்க்கு ஒரு பயனுமில்லை என்றது o

100. இனிய வனவாக வின்னுத கூறல்

கணியிருப்பக் காய்கவர்ந் தற்று.

(இ-ன்) கேட்டார்க்கிணியவாஞ் சொற்களைக்கூறலாய் இருக்க இன்னாத சொற்களைக் கூறுதல். பழ முங் காயும் ஓரிடத்தே கண்டவன் பழத்தைக் கொள்ளாது காயைக் கொண்ட தன்மைத்து,

எ-று).

இது பிறர்க்கேயன்றித் தனக்கும் நன்றாகாதென்றது. 10

7. செய்ந்நன்றி யறிதல்

செய்ந்நன்றி யறிதலாவது தனக்குப் பிறர் செய்த நன்மையை மறவாமை. இதனானே பிறர் செய்த தீமை மறக்க வேண்டும் என்ற வாறு மாயிற்று. மேல் யாதானுமொன்றைச் சொல்லுங்கால் நல்லது சொல்ல வேண்டும் என்றார். இது நல்லது நினைக்க வேண்டும் என்றமையாற் பிற் கூறப்பட்டது,

101. மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க

துன்பத்துட் டுப்பாயார் நட்பு.

(இ-ள்) தனக்குத் துன்பம் வந்தகாலத்து வலியாயினரது நட்பை மறவாதொழிக: குற்றமற்றாரது நட்பைத் துறவா தொழிக, (எ-று)

ஒருவனுக்கு எல்லாப் பொருளையும் மறத்தலும் துய்த்தலும் செய்ய நன்மை பயக்குமாயினும் மாசற்றாரது நட்பைத் துறவாமை யிருமைக்கும் நன்மைபயக்குமாறு போலத் துப்பாயார் நட்பைத்