பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36

7. செய்ந்நன்றியறிதல்

105. காலத்தி ற்ைசெய்த நன்றி சிறிதெனினு

ஞாலத்தின் மாணப் பெரிது.

(இ-ள்) உதவ வேண்டுங்காலந் தப்பாமற் செய்த வுதவி தான்சிறிதா யிருந்த தாயினும், உலகத்தினு மிகப் பெரிது. (எ-று).

இது, காலந் தப்பாமற் செய்த வுதவி உலகத்தினும் பெரி தென்றது. 5

106. தினைத்துணை நன்றி செயினும் பனைத்துணையாக்

கொள்வர் பயன்றெரி வார்.

(இ-ள்) தினையளவு நன்றி செய்தாராயினும் அதனை யிவ் வளவிற்றென்று நினையாது பனையளவாகக் கொள்ளுவார், அதன் பயன் தெரிவார் (எ-று) .

பனையளவு-அதனனுயர்ச்சி;எண்ணெனினு மமையும். இது மேற் கூறிய வாற்றானு மன்றிப் பிறவாற்றானுஞ் செய்ததும் பெரிதென்றது இவை நான் கினுைம் இதன் பெருமை கூறப்பட்டது. 6

107. எழுமை யெழுபிறப்பு முள்ளுவர் தங்கண்

விழுமந் துடைத்தவர் நட்பு.

(இ-ள்) தங்கண் உற்ற துன்பத்தை நீக்கினவரது நட்பை இப் பிறப்பிலே யன்றி எழுமையினுந் தோற்றும் பிறப்பெல்லாம் நினைப்பர் அன்றாே சான்றாேர், (எ-று).

இது மாறுதவி செய்யுங்கால் நிலத்தினும் நீரினும் உளவாம் பொருளினுற் செய்யின் அதற்கு நேர் ஒவ்வாதாதலான் அவரை எக்காலத்தினும் ஒழிவின்றி நினைத்தலேயாவதென்று கூறப்பட்டது,

7 108. உதவி வரைத்தன் றுதவி யுதவி

செயப்பட்டார் சால்பின் வரைத்து.

(இ-ள்) முன்பு செய்த வுதவியின் அளவன்று பின்பு செய்யும் மாற்றுதவி; முன்புதவி செய்யப்பட்டவன் அமைதி எவ்வளவிற்று அவ்வள விற்று அவன்செய்யும் மாற்றுதவியும் (எ-று).