பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9. அடக்கமுடைமை

அடக்கமுடைமையாவது மன மொழி மெய்களால் அடங்கி ஒழுகுதல்.

மேல் மனமொழி மெய்களான் நல்லதுசெய்ய வேண்டும் என்றார். இது அவையிற்றை அடக்கி ஒழுக வேண்டும் என்றதல்ை அதன் பிற் கூறப்பட்டது.

121. காக்க பொருளா வடக்கத்தை யாக்க

மதனினுங் கில்லே பயிர்க்கு.

(இ-ள்) ஒருவன் தனக்குப் பொருளாக அடக்கத்தை யுண் டாக்கத் தனதுயிர்க்கு ஆக்கம் அதனின் மேற்பட்டது பிறிதில்லை, எ- று).

இஃது அடக்கம் வேண்டும் என்றது. 1

122. செறிவறிந்து சீர்மை பயக்கு மறிவறிந்

தாற்றி னடங்கப் பெறின்.

(இ-ள்) அறியப்படுவனவும் அறிந்து அடக்கப்படுவனவும் அறிந்து நெறியினானே யடங்கப்பெறின். அவ்வடக்கம் நன்மை பயக்கும் (எ-று) ,

அறிவறிந்தாற்றினடங்கப் பெறின் செறிவறிந்தெனக்கூட்டுக. அறியப்படுவன-கவை ஒளி ஊறு ஒசை நாற்றம்: அடக்கப்படுவன மெய் வாய் கண் முக்குச் செவி ஆற்றினடங்குதலாவது தத்தம் நிலைமைக்கும் இல்லறத்திற்கும் சொல்லுகின்ற நெறியினானே சுவை முதலான வைத்தன் கண்ணும் மெய் முதலாயின பொறிகள் வழியாகச் செல்லும் காதலையடக்குதலும் அக்காதல் காரணமாகச் செல்லும் வெகுளியை யடக்குதலும் முதலாயின. நன்மைபயக்கு மென்று பொதுப்படக்கூறினார், எல்லா நன்மையும் பயக்கும் என்றற்கு. மேல் அடக்கம் வேண்டும் என்றார், இஃது அடக்குத் திறன் கூறிற்று. 2