பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42

9. அடக்கமுடைமை

123. ஒருமைமு னாமையோ லைந்தடக்க லாற்றி

னெழுமையு மே மாப் புடைத்து.

(இ-ள்) ஒருபிறப்பிலே பெரறிகளைந்தினையும் யாமைபோல அடக்க வல்லவனாயின், அவனுக்கு அதுதானே ஏழுபிறப்பினுங் காவலாதலை யுடைத்து, (எ-று).

அன்றாயின் வாதனை தொடரும் (எ-று). யாமை போல என்றது தனக்குள்ளவுறுப்பைப் பிறர்க் குப் புலனாகாமல் அடக்குமது போல் பொறிகள் நுகர வற்றாயிருக்க நுகராமலடக்க வேண்டும் மென்ற வாறு. பொறிகனைந்தனையும் அடக்கவல்லார்க்கு ஏழு பிறப்பும் நன்மையுண்டாம் என்றது.

124. நிலையிற் றிரியா தடங்கியான் ருேற்ற

மலைமினு மாணப் பெரிது.

(இ-ள்) தனது நிலையிற் கெடாதேயடங்கின வனது உயர்ச்சி மலையினும் மிகப் பெரிது, (எ-று) .

நிலை-வருணாச்சிரம தருமம். மேற் பொறிகளை யடக்க வண்டும் என்றாராயினும் தத்தம் நிலைமைக்குத்தக விடவேண்டு வன விட்டு அடக்கவேண்டுவன அடக்கினாலும் மிகுதியுடைத்து என்றது. 4.

125. யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

(இ-ள்) எல்லாவற்றையும் அடக்கிற்றிலராயினும் நாவொன் றையும் அடக்குக, அதனை அடக்காக்காற் சொற்சோர்வு பட்டுத் தாமே சோகிப்ப ராதலான் , (எ-று).

மேல் நிலையிற்றிரியாமல் அடங்க வேண்டும் என்றார். அவ்வாறு செய்வதரிதாயின் நாவொன்றனையும் அடக்கவேண்டும். அது பிறபயன் தருவதேயன்றி இக்காலத்தே சோகத்தைத் தவிரும் ஆதலான் என்றது. 5