பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

10. ஒழுக்கமுடைமை

(இ-ள்) ஒழுக்கத்திேைன தமக்கு எய்தாத மேம்பாட்டை எய்துவர்; அஃதின்மையானே தமக்கு அடாத பழியை எய்துவர், (எ-று).

இஃது அடாப் பழியுண்டா மென்றது. 7

138. நன்றிக்கு வித்தாகு நல்லொழுக்கந் தீயொழுக்க

மென்று மிடும்பை தரும்.

(இ-ள்) முத்திக்கு விதையாகும் நல்லொழுக்கம்; தீய வொழுக்கம் நாடோறுந் துன்பத்தையே தரும். (எ-று),

என்றதனனே இருமையின் கண்ணுமென்று கொள்ளப் படும். இது துன்பம் தரும் என்றது. S

139. ஒழுக்கமுடையவர்க் கொல்லாதே தீய

வழுக்கியும் வாயாற் சொலல்.

(இள்) தீமைபயக்குஞ் சொற்களை மறந்தும் வாயாற் சொல்லுதல், ஒழுக்க முடையார்க்கு இயலாவாம். (எ-று).

மேலையதிகாரத்து அரிதாக அடக்க வேண்டும் என்ற நாவடக்கமும் இதேைனயுண்டா மென்றது. 9

140. ஒழுக்கம் விழுப்பந் தர லா ளுெழுக்க

முயிரினு மோம்பப் படும்.

(இ-ள்) ஒழுக்கம் சீர்மையைத் தருதலானே, அதனைத் தன் உயிரைக்காப்பதினும் மிகக் காக்க, (எ-று).

மேற்கூறிய நன்மையெல்லாந் தருதலான், இதனைத் தப்பா மற் செய்யவேண்டுமென்று வலியுறுத்திற்று. 10