பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

47

11. பிறனில் விழையாமை

பிறனில் விழையாமையாவது பிறனுடைய மனையாளது தோள்நலம் விரும்பாமை. அன்புடைமை,முதலாக ஒழுக்கமுடைமை யிருகச் செய்ய வேண்டுவன சொல்லி. இனித் தவிர வேண்டுவன கூறுகின்றாாதலின், அவற்றுள் காம நெறி படர்தல் எல்லாக் குற்றத்தினும் மிகுந்ததாதலின் இது முற் கூறப்பட்டது.

141. அறனியலா னில் வாழ்வா னென்யான் பிறனியலாள்

பெண்மை நயவா தவன்.

(இ-ள்) அறநெறியானே யில்வாழ்வானென்று சொல்லப் படுவான், பிறன்வழியளானவளது பெண்மையை விரும்பாதவன், (எ-று).

இது, பிறனில் விழையாமை வேண்டும் என்றது. 1

142. பிறன்பொருளாட் பெட்டொழுகும் பேதைமை ஞாலத்

தறம்பொருள் கண்டார்க ணில்.

(இ-ள்) பிறனுடைய பொருளா யிருந்தவளை விரும்பி

யொழுகுகின்ற அறியாமை, உலகத்து அறமும் பொருளும் அறிந்தார் மாட்டு இல்லையாம், (எ.று).

இஃது அறனுமன்று, பொருளுமன்றென்றது. 2

143, அறன்கடை நின்றாரு ளெல்லாம் பிறன்கடை

நின்றாரிற் பேதையா ரில்.

(இ-ள்) காமத்தின்கண்ணே விரும்பி நின்றார் எல்லாருள்ளும், பிறைெருவன் கடைத்தலை பற்றி நின்றவர்களைப்போல் அறியா தாரில்லை, (எ-று).

அறனும் பொருளுமறியா தின்பமே கருதிப்பெண் வழிச்சென்ற கணிகைய ரோடு கலந்தும் இழிகுலத்தாரோடு கூடியும் ஒழுகும் எல்லாரினும் இவரைப் போல அறியாதாரில்லை. அவர்கள் இன் பந்தன்னைப் பெறுவர், இவர்கள் அது தானும் பெருராதலின் என்ற