பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

49

11. பிறனில் விழையாமை

(இ-ள்) பகையும் பாவமும் அச்சமும் பழியுமென்னும் நான்கு பொருளும் நீங்காவாம்; பிறரில்லின் கண்ணே மிகுவான் மாட்டு ( ))

எளியாரிடத்தன்றி ஒத்தார் மிக்கார் இல்லின் கண்ணே இவை நான்கும் பயக்கும் என்றது. இத்துணையும் இதல்ை வரும் குற்றம் கூறிற்று. 7

148. பிறன் மனை நோக்காத பேராண்மை சான்றாேர்க்

கறனொன்றாே வான்ற வொழுக்கு.

(இ-ள்) பிறரது மனையாளைப் பாராத பெரியவாண்மைத் தன்மை தானே, சான்றாேர்க்கு அறனும் அமைந்த வொழுக்கமுமாம், (எ-று) .

இஃது, இதனை விரும்பாமைதானே அறனும் ஒழுக்கமு மென்றது. 5

149. நலக்குரியார் யாரெனி குமநீர் வைப்பிற்

பிறற்குரியா டோடோயா தார்.

(இ-ள்) நலத்துக்கு உரியார் யாரெனின், அச்சத்தைத் தருகின்ற நீர் சூழ்ந்த வுலகத்தில் பிறனுக்கு உரியவளது தோளைத் திண்டாதார், (எ-4).

நலக்குரியார் என்றது பிறரால் விரும்புதற்குரியார் என்றவாறு.

இஃது எல்லாரானும் விரும்பப் படுவரென்றது. 9

150. அறன்வரைய னல்ல செயினும் பிறன்வரையாள்

பெண்மை நயவாமை நன்று.

(இ-ள்) அறத்தை வரையாதே அறனல்லாதன செய்யினும், பிறனிடத்தானவளது பெண்மையை விரும்பாமை நன்று (எ-று).

இஃது ஒரறமுஞ் செய்திலயிைனும் நன்மை பயக்கு மென் றக. 10