பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

51

12. பொறையுடைமை

154. அகழ்வாரைத் தாங்கு நிலம்போலத் தம்மை

யிகழ்வார்ப் பொறுத்த றலை.

(இ-ள்) தன்னை யகழுமவர்களை தரிக்கின்ற நிலம்போலத் தம்மை யிகழுமவர்களைப் பொறுத்தல் தலையாம், (எ-று).

இது, பொறுத்தானென் றிகழ்வாரில்லை; அதனைத் தலைமை

யாகக் கொள் வார் ) லகத்தாரென்றது. 4.

105. மிகுதியான் மிக்கவை செய்தா ரைத் தாந்தத்

தகுதியான் வென்று விடல்.

(இ-ள்) தனது செல்வ மிகுதியாலே மிகையானவற்றைச் செய்தவர்களைத்தாங்கள் தமது பொறையினுலே வென்று விடுக, (எ-று),

இது, பொறுத்தானென்பது தோல்விய காது; அதுதானே வெற்றியாமென்றது. 5.

156, இன்மைய னின்மை விருந்தொரால் வன்மையுள்

வன்மை மடவார்ப் பொறை.

(இ-ள்) வலியின்மையுள் வைத்து வலியின்மையாவது புது மையை நீக்காமை; வலியுடைமையுள் வைத்து வலியுடைமையாவது அறியாதாரைப் பொறுத்தல், (எ-று).

புதுமையென்றது தான் கேட்டறியாதது. நீக்காமையாவது பொருமை. பொறுத்தானென்று எளியகைான் அதுதானே வலியா மென்றது. 6.

157. ஒறுத்தாரை யொன்றாக வையாரே வைப்பர்

பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து.

(இ-ள்) தமக்குத் துன்பஞ் செய்தாரை மாருக ஒறுத்தாசை யொருபொருளாக மதித்து வையார்; பொறுத்தாரைப் பொன்னைப் பொதிந்து வைத்தாற்போலப் போற்றிவைப்பார் உலகத்தார் (எ-று) ஒறுப்பதனினும் பொறுப் பதனையுலகத்தார் நன்கு மதிப்ப ரென்றது. 7.