பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

55

12. அழுக்காருமை

(இ-ள்) அழுக்காறுடையானைத் திருமகள் தானும் அழுக் காறு செய்து, தன தவ்வையாகிய மூதேவியைக் காட்டி, இவன் பார்செல்லென்று விட்டுப்போம். (எ-று).

அவ்வித்து என்பதனைச் செய்யவளோடுங் கூட்டுக. இது, நல்குர விற்குக் காரணங் கூறிற்று. 8.

169. அழுக்கா றெனவொரு பாவி திருச்செற்றுத்

திய ஜி யுய்த்து விடும்.

(இ-ள்) அழுக்காறென்று சொல்லப்படுகின்ற வொருபாவி செல்வத்தையுங் கெடுத்துத் தீக்கதி யுள்ளுங் கொண்டு செல்லும், (எ-று).

ஒரு பாவி-நிகரில்லாத பாவி. இது, செல்வங் கெடுத்தலே யன்றி நரகமும் புகுவிக்குமென்றது. 9.

170. அழுக்க அடையார்க் கது.சாலு மொன்னுர்

வழுக்கியுங் கேடீன் யது.

(இ-ள்) அழுக்காறுடையார்க்கு அவ்வழுக்காறு தானே அமையும்; பகைவர் கேடுபயத்தல் தப்பியும் வரும், (எ-று).

இஃது, உயிர்க்குக் கேடுவருமென்று கூறிற்று 10.

படங்ாக

14. வெஃகாமை.

வெஃகாமையாவது பிறர் பொருளை விரும்பாமை. மேல் பிறராக்கத்தைப் பொறாமையாகாதென்றார், இஃது அதனை வவ்வ நினைத்தாலகா மையான் அதன்பின் கூறப்பட்டது.

171. வேண்டற்க வெஃகியா மாக்கம் வி% வயின்

மாண்டற் கரிதாம் பயன்.