பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

57

14. வெஃகாமை

176. அருன் வெஃகி யாற்றின் க ணின் ருன் பொருள் வெஃகிப்

பொல்லாத ஆழக் கெடும்.

( இ-ள்) அருளை விரும்பி யறநெறியிலே நின்றவனும், பொருளை விரும்பி அறனல்லாதவற்றைச் சூழக் கெடுவன். (எ-று) .

இஃது, அருளுடையயிைனுங் கெடுவனென்றது: 6

177. நடுவின்றி நன்பொருள் வெஃகிற் குடி பொன்றிக்

குற்றமு மாங்கே தரும்.

(இ-ள்) நடுவுநிலைமையின்றி மிக்கபொருளை விரும்புவாயிைன், அதேைன குலங்கெட்டு அவ்விடத்தே குற்றமு முண்டாம். (எ-று) .

இது, சந்தான நாச முண்டாமென்றது. 7

178, இறலினு மெண்ணுது வெஃகின் விறலினும் வேண்டாமை யென்னுஞ் செருக்கு .

(இ-ள்) விசாரியாதே பிறர் பொருளை விரும்புவயிைன், அது கேட்டைத் தரும்; அதனை வேண்டாமையாகிய பெருமிதம் ஆக்கத் தைத்தரும், (எ-று).

இஃது, உயிர்க்குக் கேடு தருமென்றது. இத்துணையும் இதன்ை வரும் குற்றம் கூறப்பட்டது. 8

179. அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை

வேண்டும் பிறன் கைப் பொருள்.

(இ-ள்)செல்வஞ் சுருங்காமைக்குக் காரணமியாதோ வெனின், பிறன் வேண்டுங் கைப்பொருளைத் தான் வேண்டாமை, (எ-று).

இது, செல்வ மழியாதென்றது. 9

180. அறனறிந்து வெஃகா வறிவடையார்ச் சேருத்

திறனறிந் தாங்கே திரு.