பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

59

15. புறங்கூறாமை

அறங்கூறுகின்ற ஆக்கமாவது போக நுகர்ச்சியும் வீடு

பெறுதலும், புறங்கூறுவான் சாவாதொழியப் பாவமும் பகையும்

தேடும், சாவ அவையெல்லாமில்லையாம் என்னும் பொருளாம்.

இது புறங் கூறாதார் நல்லுலகு எய்துவரென்றது 2

“ அது

183. அறங்கூரு னல்ல செயினு மொருவன்

புறங்கூரு னென்ற லினிது.

(இ-ள்) அறத்தை வாயாற் சொல்லுதலுஞ் செய்யானாய்ப் பாவஞ் செய்யினும், பிறரைப் புறஞ் சொல்லானென்று உலகத் தாரால் கூறப்படுதல் நன்றாம், (எ-று).

இது, பாவஞ்செய்யினும் நன்மை பயக்கும் என்றது. 3

184, அறஞ்சொல்லு நெஞ்சத்தா னன்மை புறஞ்சொல்லும்

புன்மையாற் காணப் படும்.

(இ-ள்) ஒருவன் அறத்தை நினைக்கின்ற மனமுடையனல் லாமை, அவன் பிறரைப் புறஞ்சொல்லும் புல்லியகுண மேதுவாக அறியப்படும், (எ-று).

இஃது, இதனைச் சொல்லுவார் அறமறியா ரென்றது 4.

185. அறனழீஇ யல்லவை செய்தலிற் றீதே

புறனழீஇப் பொய்த்து நகை.

(இ-ள்) அறத்தை யழித்து அறமல்லாதவற்றைச் செய்வ தனினும் தீது- ஒருவனைக் காணுத விடத்து இழித்துரைத்துக் கண்ட விடத்துப் பொய் செய்து நகுதல், (எ-று .

இது, பாவத்தினும் மிகப் பாவமென்றது. 5

186. யகச்சொல்லிக் கேளிர்ப் பிரிப்பர் நகச்சொல்லி

நட்பாட றேற்றா தவர்.

(இ-ள்) நீங்கும்படி சொல்லித் தமக்குக் கேளிரானரைப் பிரிப் பர், மகிழச் சொல்லி உறவு பண்ண மாட்டாதார், (எ.று).

இது நட்டாரை யிழப்பர் என்றது. 6.