பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

15. புறங் கூறாமை

187. துன்னியார் குற்றமுந் தாற்று மரபினு

ரென்னேகொ லே திலார் மாட்டு.

(இ-ள்) தம்மோடு செறிந்தார் குற்றத்தையும் பிறர்க்கு உரைக்கின்றவர், செறிவில்லார் மாட்டு யாங்ஙனஞ் செய்கின்றாரோ? ( 61 - pi).

இது, யாவரோடும் பற்றிலரென்றது. 7.

188. அறனுேக்கி யாற்றுங்கொல் வையம் புறநோக்கிப்

புன்சொ லுரைப்பான் பொறை.

(இ-ள்) பிறரில்லாதவிடம் பார்த்துப் புன்சொற் கூறுவானை நிலம் பொறுத்தது. பாறை தனக்குத் தானே தருமமாதலானே பொறுத்ததாம் இத்தனையல்லது போம், (எ-று).

இது, இவற்குத் துணையாவாரில்லை யென்றது. 8.

189 பிறன் பழி கூறுவா றன் பழி யுள்ளுந்

திறன்றெரிந்து கூறப்படும்.

(இ-ள்) பிறனுடைய பழியைச் சொல்லுமவன், தனக்குண்

டான பழிகளிலுஞ் சிலவற்றை வேறுபடத்தெரிந்து பிறராற் சொல்லப் படுவன், (எ-று) .

இது பிறரால் புறம் சொல்லப்படுவனென்றது. 9

190. ஏதிலார் குற்றம்போற் றங்குற்றங் காண்கிற்பிற்

lதுண்டோ மன்னு முயிர்க்கு,

(இ-ள்) அயலார் குற்றம்போலத் தமது குற்றத்தையுங்

கான வல்லாராயின், நிலைபெற்ற வுயிர்க்கு வருந்தீமையுண்டோ? (எ- று).

காண்பாராயின், சொல்லாரென்றது; இது புறஞ் சொல்லா மைக்குக் காரணங்கூறிற்று. 10