பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

61

| 6. பயனில சொல்லாமை

பால செ ல்லாமையாவது கேட்டார்க்குத் தனக்கும் நற்பயன் ப ாத சொற்களைக் கூறாமை அஃதாவது அறம்பொருளின்பங் காளப்பயவாது அவற்றுக்கு மாறாயினவற்றைப்பயக்கும் சொற்கள்.

இதுவும் கடியப்பட்ட சொல்லாதலின் அதன்பிற் கூறப் பட்டது.

191. சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க

சொல்லிற் பயனிலாச் சொல்.

(இ-ள்) சொல்லுவணுயின் பயனுடைய சொற்களைச் சொல் லுக; சொற்களிற் பயனிலாத சொற்களைச் சொல்லாதொழிக, ( -ாறு).

இது, பயனில சொல்லாமை வேண்டுமென்றது. 1.

192. பயணில பல்லார்முற் சொல்ல னயரிைல

நட்டார்கட் செய்தலிற் lது. (இ-ள்) பயனில்லாதவற்றைப் பல்லார் முன் கூறுதல், விருப் பமில்லாதனவற்றை நட்டார்மாட்டுச் செய்தலிந்னுந்தீதே (எ-று)

பயனில சொல்லல் இம்மை மறுமை யிரண்டின்கண்ணுந் தீமை பயக்கு மென்றானாயிற்று. மேல் பயனில்லாதன கூறலாகா தென்றார், அதனாற்குற்றமென்னை என்றார்க்குக் கூறப்பட்டது 2

193. நயனில னென்பது சொல்லும் பயனில

யாரித் துரைக்கு முரை.

இ-ள்) நயனுடைய னல்ல னென்பதனை யறிவிக்கும்.

பயனில்லாதவற்றைப் பரக்க விட்டுச் சொல்லுஞ் சொற்கள், (எ-று).

மேல் பொதுவாகத் தீமை பயக்கும் என்றார் அவற்றுள் இது இம்மையின்கண் பிறராலியம்பப் படாரென்று கூறப்பட்டது. :

194. நயன்சாரா நன்மையி னிங்கும் பயன்சாராப்

பண்பிற்சொற் பல்லா ரகத்து,