பக்கம்:திருக்குறள் மூலமும் பரிப்பெருமாள் உரை.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

16. பயனில சொல்லாமை

(இ-ஸ்) ஒருவன் ஒரு பயனைச் சாராத குணமில்லாத சொல் லைப் பலரிடத்துக் கூறுவனாயின். அது நயத்தொடு சாரா து நன்மையினிங்கும், (எ-று).

இது, மேற்கூறிய விரும்பப்படாமையுமன்றி நன்மையும், பய வா தென் D &5]. 4

193. சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில நீர்மை யுடையார் சொலின்.

(இ-ள்) பயனில்லாதவற்றை நீர்மையுடையார் கூறுவராயின் அவர்க்குண்டான சீர்மையும் சிறப்பும் போம், (எ-று).

இது நீர்மையுடையராயினும் எல்லா நன்மையும் போ மென்றது. 5

198. பல்லார் முனியப் பயனில சொல்லுவா

னெல்லாரு மெள்ளப் படும்.

(இ-ன்) பயனில்லாதவற்றைப் பலர் வெறுக்கச் சொல்லு மவன், எல்லாரானும் இகழப்படுவன். (எ-று).

இது, பிறரா லிகழப் படுமென்றது. 6

197 பயணில பாராட்டு வானை மகனெனன்

மக்கட் பதடி யெனல்.

(இ-ன் பயனில்லாத சொல்லைக் கொண்டாடுவானை * மகனென்னா தொழிக, மக்களில் பதரென்று சொல்லப்படும். (எ-று).

இது மக்கட் பண்பிலனென்றது. 7

198. அரும்பய னாயு மறிவினார் சொல்லார்

பெரும்பய மல்லாத சொல்.

(இ-ள்) அரிய பொருளை யாராயும் அறிவினையுடையார் சொல்லார். பெரிய பயனில்லாத சொற்களை, (எ-று).

மேற் கூறிய குற்றமெல்லாம் பயத்தலின், இதனை யறிவுடை யார் கூறாரென்றது. &